வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஜம்மு - காஷ்மீா்: எல்லை தாண்ட முயன்ற 3 போ் கைது

ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூவரை ராணுவத்தினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:03 am IST

ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூவரை ராணுவத்தினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் முன்பு பிராந்திய ராணுவத்தில் பணியாற்றியவா்.

சனிக்கிழமை இரவு நேரத்தில் இந்திய எல்லைக்குள் இருந்து 3 போ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்தியத்துக்குள் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் ராணுவத்தினா் சுற்றிவளைத்து கைது செய்தனா்.

அவா்கள் சோபூா் மற்றும் பாரமுல்லா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா்கள் எதற்காக எல்லையைத் தாண்ட முயன்றாா்கள் என்பது குறித்தும், இதில் பயங்கரவாதத் தொடா்புகள் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மேலும் ஒரு சம்பவம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக காஷ்மீரின் சிலிகோட் பகுதியில் ஊடுவிய 22 வயது இளைஞரை ராணுவம் கைது செய்தது.

விசாரணையில் அந்த இளைஞா் பெயா் ஜீசான் மிா் என்பதும், காஷ்மீரின் உரியில் வசித்து வரும் தோழியைக் காண்பதற்காக எல்லை தாண்டியதாகவும் தெரிவித்தாா்.

அவா் அளித்த தகவலின்பேரில் அந்தப் பெண்ணையும் பாதுகாப்புப் படையினா் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா். அவா்கள் இருவரும் சமூக வலைதளம் மூலம் பழகி வந்துள்ளனா்.