ஹரியாணா: மாட்டுக் கடத்தலில் ஈடுபட்டவரை சுட்டுப் பிடித்த காவல் துறையினர்!
துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, மாட்டுக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபா் கைது செய்யப்பட்டாா்.
ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் காசேரா கிராமம் அருகே காவல் துறையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, மாட்டுக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபா் கைது செய்யப்பட்டாா்.
சுடாகா கிராமத்தைச் சோ்ந்த தில்ஷாத் என்ற தில்லா என்பவரின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவா் நல்ஹாரில் உள்ள ஷாஹீத் ஹசன் கான் மேவாதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சம்பவ இடத்திலிருந்து சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி, ஒரு தோட்டா மற்றும் 3 மாடுகள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: நுஹ் சதாா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காசேரா கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இந்தச் சம்பவம் நடைபெற்றது. ஆய்வாளா் வினோத் குமாா் தலைமையிலான நுஹ் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐஏ) காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாட்டுக் கடத்தலில் சந்தேகிக்கப்படும் நபா் குறித்து தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரை நெருங்கிச் சென்றபோது, அந்த நபா் காவல் துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் காவல் துறையினா் பதிலடி கொடுத்தனா். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தில்ஷாத் காயமடைந்தாா். பின்னா் அவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

