சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை

ஜம்முவில் சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள நெல் வயலில் இருந்து ட்ரோன் கண்டெடுக்கப்பட்டது பற்றி...

Drone found abandoned near IB in Jammu, probe underway

கோப்புப்படம்

Updated On :

ஜம்முவில் சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள நெல் வயலில் இருந்து ட்ரோன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜம்முவின் மக்யால் கிராமத்தைச் சேர்ந்த விஜய் குமார் என்பவருக்குச் சொந்தமான வயலில், சனிக்கிழமை மாலை கைவிடப்பட்ட நிலையில் ட்ரோன் கண்டறியப்பட்டது. இதைக் கவனித்த குமார், உடனடியாக இதுகுறித்து கனா சக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர், அந்த ட்ரோனைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த ட்ரோன் பாகிஸ்தானிலிருந்து வந்ததா அல்லது உள்ளூர் நபர் யாராவது இயக்கியதா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே ட்ரோனின் இயக்கம் மற்றும் அதன் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எல்லைப் பகுதியில் ட்ரோன் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Summary

A drone was discovered in a paddy field near the International Border in Jammu on Saturday evening, prompting the police to launch an investigation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER