ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் அதிரடி சோதனை!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் மேற்கொண்டுள்ள தீவிர தேடுதல் வேட்டை பற்றி...

Security forces, police launch multiple search operations in J-K's Poonch

ஜம்மு-காஷ்மீர்.

Updated On :

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில், நான்கு இடங்களில் பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் வெள்ளிக்கிழமை தேடுதல் வேட்டையைத் தொடங்கினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி பகுதிக்கு அருகில், கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வந்ததாகக் கருதப்படும் நான்கு பயங்கரவாதிகள் ஐஇடி குண்டு வெடித்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், செவ்வாய்க்கிழமை சத்தார்பன் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடமொன்றும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த மறைவிடத்திலிருந்து தானியங்கி துப்பாக்கி, ஆறு கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

அதிகாரிகளின் தகவல்படி, மெந்தர் உட்பிரிவுக்கு உட்பட்ட குர்சாய் - ஹாரூனி - பைதார் பகுதியில், குர்சாய் சிறப்பு நடவடிக்கைக் குழுவினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

இதேபோல், மெந்தர் சிறப்பு நடவடிக்கைக் குழுவினரும் ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையினரும் இணைந்து, தாரணா கிராமம், காஷ்மீர் மொஹல்லா, பெஹ்ரி வனப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும், மான்கோட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மங்லானு - சில்லா வனப்பகுதிகளில், மான்கோட் சிறப்பு நடவடிக்கைக் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எல்லை மாவட்டமான இங்கு, பாதுகாப்பை பலப்படுத்தவும், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Security forces and police launched search operations at four locations as part of heightened security measures in Jammu and Kashmir's Poonch district on Friday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.