சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு!

கனமழை காரணமாக, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ரயில் தண்டவாளத்தில் பூசிவாக்கம் அருகே மண் சரிவு ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Landslide on the railway track near Kanchipuram: Train services disrupted!

காஞ்சிபுரம்

Updated On :

கனமழை காரணமாக, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ரயில் தண்டவாளத்தில் பூசிவாக்கம் அருகே சுரங்கப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரத்தில் இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இன்று மாலை 2 மணி முதல் 4 மணி வரை பெய்த கனமழை காரணமாக, காஞ்சிபுரம் - வாலாஜாபாத் ரயில் தண்டவாளத்தில் பூசிவாக்கம் அருகே எல்.சி-21 பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக சுரங்கப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு மாலையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ரயில் நிலையங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கடற்கரையிலிருந்து காஞ்சிபுரம் வந்த ரயில்கள் வாலாஜாபாத் ரயில் நிலையத்திலும், திருமால்பூரிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் காஞ்சிபுரத்திலும் நிறுத்தப்பட்டன.

இதனால் பயணிகள் சற்று சிரமப்பட்டனர். இருப்பினும், ரயில்வே நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்தது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் அரக்கோணம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் சென்னை செல்ல வழிவகை செய்யப்பட்டது.

இதன் காரணமாக, சென்னை கடற்கரையிலிருந்து இயங்க வேண்டிய 3 ரயில்களும், திருமால்பூரிலிருந்து இயங்க வேண்டிய 1 ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போது ரயில்வே பணியாளர்கள் சீரமைப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Due to heavy rains, soil erosion occurred near Poosivakkam on the Kanchipuram-Chengalpattu railway section, disrupting train services.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.