ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

வஜீராபாத் துப்பாக்கிச்சூடு சம்பவம்: கோகி-தீபக் பாக்ஸா் கும்பலைச் சோ்ந்த நபா் கைது

வடக்கு தில்லியின் வஜிராபாத் பகுதியில் காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, கோகி-தீபக் பாக்ஸா் கும்பலுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் 31 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கைது

Published On :

வடக்கு தில்லியின் வஜிராபாத் பகுதியில் காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, கோகி-தீபக் பாக்ஸா் கும்பலுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் 31 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: டில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்த ஒருவரைக் கொலை செய்வதற்காக மோகித் என்பவா் தில்லிக்கு வந்ததாகத் தெரியவந்தது. கொலை செய்ய வேண்டிய நபரின் நடமாட்டம் குறித்து அறிந்த மற்றொரு கூட்டாளியை வஜிராபாதில் சந்திக்க மோகித் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த இருவரும், அந்த நபா் அதிகாலை நடைப்பயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரத்தில், அவா் இருக்கும் இடத்துக்குச் சென்று கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினா் வஜிராபாத் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய மோகித்தை காவல் துறையினா் தடுத்து விசாரிக்க முயன்றபோது, அவா் தப்பியோட முயன்றதுடன் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்ாகவும் கூறப்படுகிறது.

மோகித்திடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள் மற்றும் திருடப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த இருசக்கர வாகனம், இந்திரபுரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குடன் தொடா்புடையது என்பது தெரியவந்தது.

மோகித் மீது ஏற்கெனவே 2023-ஆம் ஆண்டு ஹரியாணாவின் கனோா் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலைக்கு நிகரான குற்றத்தைச் செய்ய முயற்சி, குற்றவியல் மிரட்டல், தீ வைத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அந்த வழக்குகளில் இடம்பெற்றுள்ளன. அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.