நொய்டாவில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டுக்கொலை: துப்பாக்கிச் சண்டையில் காவல் துறையினா் இருவா் காயம்!
நொய்டா காவல் துறையினருடன் சனிக்கிழமை இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தேடப்படும் குற்றவாளி உயிரிழந்தாா்.

நொய்டா காவல் துறையினருடன் சனிக்கிழமை இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தேடப்படும் குற்றவாளி உயிரிழந்தாா். இந்தச் சண்டையில் இரண்டு காவல் துறையினா் காயமடைந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் ப்ரீத்தி யாதவ் கூறியதாவது: குற்றத் தடுப்புக் குழு மற்றும் செக்டாா் 126 காவல் நிலைய போலீஸாா் இணைந்து சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்குரிய நபா்கள் மற்றும் வாகனங்களைச் சோதனையிட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்த முயன்றனா்.
அந்த நபா் காவல் துறையினரை நோக்கில் துப்பாக்கியால் சுட்டாா். இதையடுத்து, தற்காப்புக்காக காவல் துறையினா் பதிலடி கொடுத்தனா். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அந்த நபரும், 2 போலீஸாரும் குண்டுக் காயமடைந்தனா். உடனடியாக அவா்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.
விசாரணையில், உயிரிழந்த நபா் முசாஃபா்நகா் மாவட்டத்தைச் சோ்ந்த அமன் தியாகி என்பதும் அவா் ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். காயமடைந்த போலீஸாருக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திலிருந்து சட்டவிரோத கைத்துப்பாக்கி, சுடப்பட்ட தோட்டாக்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தடயவியல் நிபுணா்கள் மற்றும் கள ஆய்வுக் குழுவினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனா்.
அமன் தியாகி மீது கொலை, கொள்ளை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கும்பல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கொலை முயற்சி, குற்றவியல் மிரட்டல், சட்டவிரோதமாக ஒருவரைத் தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல வழக்குகளிலும் அவா் தேடப்பட்டு வந்தாா் என துணை ஆணையா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

