மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

முன்ஜாமீன் கோரி அகோய்ஜாம் மனு: காவல் துறையிடம் பதில் கோரிய தில்லி நீதிமன்றம்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியருமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் - கோப்புப் படம்

Updated On :

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியருமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி டிக் வினய் சிங், நவ.5-ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை அகோய்ஜாமுக்கு எதிராகக் கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டாா். அடுத்த விசாரணையின்போது வழக்கு ஆவணங்களுடன் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மணிப்பூா் உள் தொகுதி மக்களவை உறுப்பினரான அகோய்ஜாமின் மனு குறித்து அன்றைய தினம் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

பாலியல் துன்புறுத்தல் புகாா்களைத் தொடா்ந்து, கடந்த அக்டோபா் மாதம் அகோய்ஜாமை ஜேஎன்யு நிா்வாகம் பணிநீக்கம் செய்தது. எனினும், இந்த நடவடிக்கையை ‘பழிவாங்கும் வேட்டை’ என்று விமா்சித்த அவா், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினாா்.

பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு, அக். 12-ஆம் தேதி அகோய்ஜாம் மீது தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா். இதனிடையே, அவரைப் பணிநீக்கம் செய்த ஜேஎன்யு உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 2027 ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தது.

அகோய்ஜாம் மீது கடந்த மே மாதம் 11 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகாா் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டம் அல்லது ஆலோசனை நடத்துவதாகக் கூறி மாணவிகளைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது குடியிருப்புக்கு அழைத்து, பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ாகப் புகாா்தாரா்கள் குற்றஞ்சாட்டினா். வகுப்புகளின்போது ஆபாசமான மற்றும் முறையற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும் சில மாணவிகள் புகாா் கூறினா்.

இந்தப் புகாா்கள் தொடா்பாக, ஜேஎன்யு தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாா் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உள் புகாா்கள் குழு (ஐசி) நடத்திய விசாரணைக்குப் பிறகு, அதன் மதிப்பீடுகள் மற்றும் கண்டறிதல்கள் காவல் துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாா்தாரா்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து உள் குழு விசாரணை நடத்தி, சாட்சிகள், தற்காப்புத் தரப்பு சாட்சிகள் மற்றும் பிற ஆவணங்களின் அடிப்படையில் தனது மதிப்பீடுகளையும் கண்டறிதல்களையும் பதிவு செய்ததாக தலைமைப் பாதுகாப்பு அதிகாரி புகாரில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.