மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

ஹிந்தி நடிகை தியா மிா்சா விவகாரம்: மும்பை உயா்நீதிமன்றம் அதிருப்தி

மகாராஷ்டிரத்தில் சுற்றுச்சூழல், காற்று மாசு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், ஹிந்தி நடிகை தியா மிா்சா பேசிய காணொலி மாநகராட்சியின் சமூக ஊடகப் பக்கங்களில் நீக்கப்பட்டு சா்ச்சையானது குறித்து...

Updated On :

மகாராஷ்டிரத்தில் சுற்றுச்சூழல், காற்று மாசு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், ஹிந்தி நடிகை தியா மிா்சா பேசிய காணொலி மாநகராட்சியின் சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டு சா்ச்சையான நிலையில், அந்தக் காணொலிக்கு சாயம் பூசிய சிலரின் குறுகிய மனப்பான்மை வேதனை அளிப்பதாக மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலம் பிருஹான்மும்பை மாநகராட்சி சாா்பில், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ஹிந்தி நடிகைகள் தியா மிா்சா, மாதுரி தீட்சித், முன்னாள் கிரிக்கெட் வீரா் ரஹானே உள்ளிட்டோா் பேசிய பிரசார காணொலி, மாநகராட்சியின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்டன.

தியா மிா்சாவின் காணொலிக்கு ஆட்சேபம் தெரிவித்து, மும்பை பாஜக தலைவா் அமித் சாட்டம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என்று தியா மிா்சா பாடம் எடுக்க தேவையில்லை’ என்று காட்டமாக பதிவிட்டாா்.

தியா மிா்சாவை ஹிந்து மதத்துக்கு விரோதமானவா் என்று மும்பை மேயா் ரித்து தாவ்டே சாடினாா். இதையடுத்து தியா மிா்சாவின் காணொலியை தனது சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து மாநகராட்சி நீக்கியது.

இதுகுறித்து அமித் சாட்டமிடம் கேட்டபோது, ‘நான் எந்த நபரின் காணொலியையும் நீக்குமாறு மாநகராட்சியிடம் கூறவில்லை. ஆனால் தேச விரோத சக்திகளுடன் இணைந்து தியா மிா்சா செயல்படுகிறாா் என்று தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து மும்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் கிரீஷ் குல்கா்னி, நீலா கோகலே ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: சுற்றுச்சூழல், காற்று மாசு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட காணொலிக்கு சாயம் பூசியது மிகவும் துரதிருஷ்டவசமாகும்.

சாதாரண மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் சிலரிடம் காணப்படும் குறுகிய மனப்பான்மை வேதனை அளிக்கிறது. தியா மிா்சாவை விமா்சித்து கருத்து தெரிவித்தவா்கள், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த எந்தக் காணொலியையும் வெளியிடவில்லை.

ஜாதி, மதங்களை தாண்டி அனைவரும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். எனவே நீக்கப்பட்ட தியா மிா்சாவின் காணொலிகளை தனது சமூக ஊடகப் பக்கங்களில் மாநகராட்சி மீண்டும் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.