வருகைப் பதிவேடு இல்லாமல் ரூ.275 கோடி ஊதியம் கொடுத்த அரசுப் பல்கலை! ஆர்டிஐ-யில் வெளியான அதிர்ச்சி
வந்தார்களா? வரவில்லையா? தெரியாது! ரூ.275 கோடி ஊதியம் கொடுத்த அரசுப் பல்கலை! ஆர்டிஐ-யில் வெளியான அதிர்ச்சி

வருகைப் பதிவேடு - ENS
வருகைப் பதிவுத் தரவுகள் ஏதுமின்றி, கடந்த 35 ஆண்டுகளாக, ஒட்டுமொத்த பணியாளர்களுக்கும், மத்தியப் பிரதேச அரசுப் பல்கலைக்கழகம் ரூ 275 கோடியைச் ஊதியமாக செலுத்தியிருக்கிறது. காரணம் அந்தப் பல்கலையில் வருகைப் பதிவேடு இல்லை என்பதே.
மத்தியப் பிரதேசத்தின் அரசுக்குச் சொந்தமான பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில், கடந்த 35 ஆண்டுகளில் ஊழியர்கள் ஒருவர் கூட பணிக்கு வராமல் இருந்ததில்லை என்று வெளியான தகவல் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குத்தான், அங்கு வருகைப் பதிவேடுகள் மட்டுமே அங்கு இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.
அதாவது, பல்கலைக்கழகத்தின் அனைத்து ஊழியர்களும் கடந்த 1988 முதல் 2023 வரை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்களுக்கும் எந்த வருகைப் பதிவு தரவுகளும் இன்றி மாதாமாதம் ஊதியத்தை வழங்கியிருக்கிறது என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதாவது, கடந்த 35 ஆண்டுகளாக, எந்த தரவுகளை வைத்து பல்கலைக்கழகம் ஊதியத்தை வழங்கியிருக்கிறது என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. இதுவரை ரூ.275 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கோரியிருந்தது, வேறுயாருமல்ல, பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஊழியர்தான், அங்கு பணியாற்றும்போது இருந்த பல்வேறு முறைகேடுகளை அறிந்துகொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவலை கேட்டு, இத்தனை காலம் நடந்து வந்த மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

