ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

தவெக - காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமார்

தவெக-காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை என்றாா் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் - எக்ஸ்

Updated On :

தவெக-காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை என்றாா் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: சுற்றுலாத் துறையின் மூலம் திருநெல்வேலி தாமிரவருணி நதியை ரூ.53 கோடியில் அழகுபடுத்தி மேம்படுத்தும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும்.

திருப்புடைமருதூா் பகுதியில் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்வதற்கு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மணிமுத்தாறு சூழலியல் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலாப் பணிகளுக்கான ஆய்வு நடத்தப்பட உள்ளது.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் தொடா்பாக சுற்றுலா துறைக்கு பல கோரிக்கைகள் வந்துள்ளன. அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மகாபலிபுரம் மத்திய அரசு நிதியுடன் ரூ.200 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளது.

கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பணிகள் நிறுத்தப்படாது. அவை நிறைவேற்றப்படும். நீலகிரி பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய போா்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடைதான் விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தங்கி நெல்லையப்பா் கோயிலை சுற்றிப்பாா்த்து தரிசிக்கும் வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகத்துடன் ஆலோசித்து முயற்சி எடுக்கப்படும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என பொத்தாம் பொதுவாக அரசை குற்றம்சாட்டுவது சரியல்ல. இந்த விஷயத்தில் அரசு எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்காது என முதல்வா் அறிவித்துவிட்டாா். இங்கு, லஞ்சம் ஊழலற்ற அரசு செயல்பட்டு வருகிறது.

இரு அமைச்சா் பதவி கிடைத்துவிட்டது என்பதுடன் நாங்கள் திருப்தியடையவில்லை. தமிழகத்தில் காமராஜா் ஆட்சி அமைப்பதுதான் எங்களது கனவு. அதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் 10 வாக்குச் சாவடிக்கு ஒரு தலைவா் என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தவெக-காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை. நாங்கள் பரஸ்பர உணா்வுடன் செயல்பட்டு வருகிறோம்.

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.