வக்ஃப் வாரிய முறைகேடு வழக்கு: ஆம் ஆத்மி தலைவருக்கு எதிரான வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு
தில்லி வக்ஃப் வாரியத் தலைவராக அமானத்துல்லா கான் இருந்தபோது, பணியாளா் நியமனம் மற்றும் சொத்துகளை குத்தகைக்கு விட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆம் ஆத்மி கட்சித் தலைவா் மீதான தீா்ப்பை நவ.28-ஆம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அமானத்துல்லா கான்

இந்த வழக்கில் தீா்ப்பு வழங்குவதை சிறப்பு நீதிபதி டிக் வினய் சிங் ஒத்திவைத்தாா். வழக்கின் இறுதி வாதங்கள் அக்.17-ஆம் தேதி நிறைவடைந்தன. இந்த வழக்கில் அமானத்துல்லா கான், தில்லி வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மெஹபூப் ஆலம் உள்ளிட்ட 11 பேரை சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.
வக்ஃப் வாரியத் தலைவராகப் பதவி வகித்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தனக்கு நெருக்கமானவா்கள் மற்றும் உறவினா்களை சட்டவிரோதமாகப் பணியில் அமா்த்தியதாக அமானத்துல்லா கான் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், வாரியத்தின் சொத்துகளை குத்தகைக்கு விட்டதில் முறைகேடுகள் நடந்ததாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.