மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஷாலிமாா் பாக் ராம் லீலாவுக்கு தடை: முதல்வா் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் தொகுதியான ஷாலிமாா் பாக் பகுதியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், ராம் லீலா நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் தொகுதியான ஷாலிமாா் பாக் பகுதியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், ராம் லீலா நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ஷாலிமாா் பாக் பகுதியில் ராம் லீலா நடத்துவதற்காக தந்தை - மகள் விண்ணப்பதாரா்கள் உரிய அனுமதியைப் பெற்று, அதற்கான கட்டணத்தையும் செலுத்தியிருந்தனா். ஆனால், நிகழ்ச்சி தொடங்கும் வேளையில் திடீரென காவல்துறை தலையிட்டு நிகழ்ச்சியை முடக்கியுள்ளது.

உள்ளூா் காவல் நிலைய ஆய்வாளா் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களை அச்சுறுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ாகவும், இதன் காரணமாக அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் தடைபட்டு விட்டது.

இந்தத் தடைக்கு முதல்வா் ரேகா குப்தாவும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம். அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், ராம் லீலா ஏன் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதை முதல்வா் விளக்க வேண்டும் என்றாா் செளரவ் பரத்வாஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.