குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
தில்லி குருத்வாரா நிர்வாகக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) அளித்த புகாரின் பேரில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
தில்லி குருத்வாரா நிர்வாகக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) அளித்த புகாரின் பேரில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது: தில்லி பங்களா சாஹிப் குருத்வாரா வளாகத்தில் கடந்த வாரம் ஆம் ஆத்மி கட்சியினர் அரசியல் முழக்கமிட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
"குரு கர்' என அழைக்கப்படும் குருத்வாராவின் புனிதத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக தவறாகப் பயன்படுத்த முயற்சித்ததாக டிஎஸ்ஜிஎம்சி குற்றஞ்சாட்டியிருந்தனர். மேலும், ஆம் ஆத்மி தலைவர்களும் எம்எல்ஏக்களும் சமூக ஊடகங்களில் பரப்பிய சில காணொலிகள் மூலம் நடந்த சம்பவத்தை திரித்து வெளியிட முயன்றதாகவும் குருத்வாரா நிர்வாகக் குழு கூறியிருந்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குருத்வாரா வளாகத்தில் நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியை நிரூபிக்க புகார்தாரரான குருத்வாரா நிர்வாகக் கமிட்டி சமர்ப்பித்த காணொலி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக ஆம் ஆத்மி கட்சியினரின் போராட்டத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக அரவிந்த் கேஜரிவால், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) சனிக்கிழமை அறிவித்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியினர் பங்களா சாஹிப் குருத்வாரா வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அரசியல் முழக்கங்களை எழுப்பினர்.
இது ஆலயத்தின் அமைதிக்கு பாதகம் விளைவித்ததாக காவல் நிலையத்தில் குருத்வாரா கமிட்டி நிர்வாகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

