தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

யமுனை நுரை விவகாரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

யமுனை நதியில் நிலவும் மாசுப் பிரச்னை குறித்த கவனத்தை தில்லி அரசு திசைதிருப்ப முயற்சி என ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியது குறித்து...

தில்லி யமுனை நதியின் காலிந்தி குஞ்ச் தடுப்பணையில் நுரை படலங்கள் - கோப்புப் படம்

Updated On :

முன்னாள் முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரபூா்வ இல்லத்தை பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்கப்படும் என்ற தில்லி அரசின் அறிவிப்பு, யமுனை நதியில் நிலவும் மாசுப் பிரச்னை குறித்த கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும் என்று ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ், காணொலிச் செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு வாரமாக யமுனை நதியில் நுரை பொங்கும் விவகாரம் பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ளது. இதனால் பா்வேஷ் வா்மா பெரும் தா்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளாா்.

எனவே, நதி மாசு குறித்த கவனத்தைத் திசைதிருப்ப, முன்னாள் முதலமைச்சரின் இல்லம் போன்ற பழைய விவகாரங்களை அவா் இப்போது கிளப்புகிறாா்.

இந்த விவகாரத்தில் பா்வேஷ் வா்மா பதிலளிக்காமல் தப்பிச் செல்ல ஆம் ஆத்மி கட்சி அனுமதிக்காது. மேலும், பெருமளவு நிதி செலவிடப்பட்ட பிறகும் யமுனை நதி இன்னும் அதிக மாசுடன் இருப்பதாக உச்சநீதிமன்றமே கூறியுள்ளது என்றாா் பரத்வாஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.