இ20 பெட்ரோல் 420 ஆக மாறியது! மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி!
எத்தனால் கலப்பு விவகாரம் குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி..

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி - X
இ20 பெட்ரோல் இப்போது 420 ஆக மாறியதாக மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் எத்தனால் கலப்பு 31.2 சதவீதம் வரை இருப்பதாக அந்த மாநில அரசு வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,
இ20 பெட்ரோல் தற்போது 420 ஆக மாறிவிட்டது. பொதுமக்களின் வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடப்படுகிறது. பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுவதாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், கர்நாடகத்தின் 7 மாவட்டங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தது.
இதில் 14 மாதிரிகளில் 11 மாதிரிகளில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதன்மூலம், வாகன ஓட்டிகள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்கினாலும், அவர்களது வாகனங்களில் எத்தனால் அதிகளவில் நிரப்பப்படுவது தெரிய வந்துள்ளது.
பெட்ரோல் நிலையங்களிலும் இதுகுறித்த விவரங்கள் குறிப்பிடுவதில்லை. நமது வாகனங்களில் நிரப்பப்படும் எரிபொருள் என்ன என்பதைப் பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்.
பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது? 20 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலக்கும் பெட்ரோல் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? பொதுவெளியில் என்னுடன் விவாதிக்க நான் விடுத்த சவால் என்ன ஆனது? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


