ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்! 2 நாள்களுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை!சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

நூற்றாண்டு காணும் எல்.கே. அத்வானிக்கு அன்புமணி வாழ்த்து!

நூற்றாண்டு காணும் எல்.கே. அத்வானிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...

எல்.கே. அத்வானி, அன்புமணி ராமதாஸ் - கோப்புப்படம்

Updated On :

நூற்றாண்டு காணும் எல்.கே. அத்வானிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

இந்திய அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத அத்தியாயத்திற்கு சொந்தக்காரரான பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும்,  முன்னாள் உள்துறை அமைச்சருமான  எல்.கே. அத்வானியின் பிறந்த நாள் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி, அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவை ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவை  உருவாக்கி வளர்த்தெடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது. இந்தியாவில் அதிக காலம் தொடர்ந்து உள்துறை அமைச்சராக பணியாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் கோரிக்கையை ஏற்று 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த கொள்கை அளவில் ஒப்புக்கொண்டவர்.

வாழும் அரசியல் தலைவர்களில் மிக மூத்தவரான பாரத ரத்னா  எல்.கே. அத்வானி இன்னும் நீண்ட காலம் வாழ்த்து வழிகாட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

PMK leader Anbumani Ramadoss extended birthday wishes to L. K. Advani on Sunday (Nov. 8) as the latter reaches his centenary year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.