ஊழியர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம் போனஸ் வழங்கிய சூரத் முதலாளி! வைரல் விடியோ!

ஊழியர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கமாக, தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது குறித்து...

ஊழியர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் போனஸ் வழங்கும் முதலாளி - எக்ஸ்

Updated On :

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ. 1 லட்சம் ரொக்கமாக வழங்கியுள்ளார். இத்துடன் சில பரிசுப் பொருள்களையும் வழங்கியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி பல பெரிய நிறுவனங்களே தங்கள் ஊழியர்களுக்கு இனிப்புகளையும் பட்டாசு பெட்டியையும் மட்டுமே தீபாவளி பரிசாகக் கொடுக்கின்றன. ஆனால், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ராம்ஸ்வரூப் முண்ட் என்பவர் தனது ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கத்தை தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார்.

ஆடைகளை ஏற்றுமதி செய்துவரும் ராம்ஸ்வரூப்பிடம் 50 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே வயது வித்தியாசம் பாராமல் ரூ. 1 லட்சத்தையும் பரிசுப் பொருள்களையும் போனஸாக வழங்கியுள்ளார்.

தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை தனது குடும்ப உறுப்பினர்களைப்போன்று எண்ணுவதால், எந்தவொரு பொருளாதார பிரச்னையுமின்றி குடும்பத்துடன் அவர்கள் தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக ராம்ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

இதற்காக முன்கூட்டியே ரொக்கமாக பணத்தை (ரூ. 10 முதல் ரூ. 500 நோட்டுகள் வரை) ஏற்பாடு செய்து, அதனை வெள்ளித் தட்டில் வைத்து அனைத்து ஊழியர்களையும் அழைத்து தனது மனைவியின் கைகளால் ரொக்கத் தொகையையும் பரிசுகளையும் வழங்கியுள்ளார்.

பணம் நம்மை செல்வந்தராக்கும் ஆனால், உண்மையான அக்கறை மட்டுமே நம்மை வளமுடையவராக்கும் என ராம்ஸ்வரூப் கூறுகிறார்.

தீபாவளியையொட்டி ஊழியர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கத்தை போனஸாக வழங்கப்பட்ட இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. நிறுவனத்தின் முதலாளியை பலர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Summary

Surat Businessman Gives Rs 1 Lakh Cash Bonus To Every Employee For Diwali

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.