ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தீபாவளிக்கு 3 வாரங்களே! அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்காதது ஏன்?

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் இன்னும் அறிவிக்காதது குறித்து அன்புமணி கேள்வி...

TN Govt

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Updated On :

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக பொதுத்துறை தொழிலாளர்களுக்கு இன்னும் போனஸ் அறிவிக்கப்படாதது குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தீபாவளி குறிப்பிடத்தக்கது. 2026-ஆம் ஆண்டுக்கான தீபாவளி வரும் நவம்பர் 8-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதற்கு வசதியாக அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு முன்பணமும், போக்குவரத்துக் கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு முன்பணத்துடன், மிகை ஊதியமும் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. தீபாவளி திருநாளுக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன் இவை வழங்கப்பட்டால் தான் அதைக் கொண்டு தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு புத்தாடைகளை வாங்கி தீபாவளிக்கு தயாராக முடியும்.

ஆனால், 2026-ஆம் ஆண்டு தீபாவளி திருநாளுக்கு இன்னும் 23 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அது குறித்த அறிவிப்புகள் எதுவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை. வழக்கமாக தீபாவளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுகள் நடத்தப்படும். அப்போது தான் மிகை ஊதியத்தின் அளவை கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்மானித்து, ஒரு மாதத்திற்கு முன்பாக வழங்க முடியும். அண்மைக் காலங்களில் தொழிற்சங்கங்களுடன் எந்த பேச்சும் நடத்தாமல் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின் ஆகியவற்றில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% மிகை ஊதியம், பிற பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் நிதிநிலையை பொருத்து 8.33% முதல் 10% வரை மிகை ஊதியத்தை அரசு தன்னிச்சையாக அறிவித்து வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கடந்த 22 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20% மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கான மிகை ஊதியம் என்பது அவர்களின் மொத்த ஊதியத்தை கணக்கிட்டு வழங்கப்படுவதில்லை. மாறாக மிகை ஊதியக் கணக்கீட்டுக்கான ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதன் ஆண்டு சராசரியிலிருந்து தான் 20% மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி குறைந்தபட்சமாக ரூ. 7,000 முதல் அதிகபட்சமாக ரூ. 16,800 மட்டுமே மிகை  ஊதியமாக வழங்கப்படும் நிலையில், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மிகை ஊதியத்தின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரி வருகின்றனர். ஆனால், அதை தமிழக அரசு ஏற்கவே இல்லை.

4 அல்லது 5 பேர் கொண்ட ஒரு தொழிலாளியின் குடும்பம் தீப ஒளித் திருநாளைக் கொண்டாட ரூ. 7000 அல்லது ரூ. 16,800 எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது. ஒரு குடும்பம் மிகவும் எளிமையாக தீபாவளி திருநாளைக் கொண்டாட வேண்டும் என்றால் கூட, அதற்கு குறைந்தபட்சம் ரூ. 25,000 தேவைப்படும்.   அதனால் தான் தீபாவளி திருநாளுக்கு 30%, அதாவது ரூ. 25,210 மிகை ஊதியமாக வழங்க வேண்டும்; இதை பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும், தற்காலிகப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள் என அனைவருக்கும் முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

தீபாவளி திருநாளைக்கு மிகைஊதியம் வழங்குவதைத் தவிர்க்க முடியாது எனும் நிலையில், அதை முன்கூட்டியே அறிவித்து வழங்குவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? என்பது தான் தெரியவில்லை. இந்த விஷயத்தில் முந்தைய அரசுகள் கடைபிடித்த அதே அணுகுமுறையை இப்போதைய அரசும் கடைபிடிக்கக் கூடாது. தேவையில்லாமல் கால தாமதம் செய்து கடைசி நேரத்தில் மிகை ஊதியம் வழங்குவதால் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களின் குடும்பங்கள் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை ஏற்படுகிறது. தொடர்வண்டித்துறையில் பணியாற்றும் 11.40 லட்சம் பணியாளர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தமிழக அரசு தாமதிக்கக் கூடாது.

எனவே, தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு  தொழிலாளர்களுக்கு 30% தீபாவளி மிகை ஊதியம் வழங்கப்பட வேண்டும். இலாபம் ஈட்டும் நிறுவனங்கள், இழப்பை சந்திக்கும் நிறுவனங்கள், நிரந்தரப் பணியாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள், அவுட்சோர்சிங் ஊழியர்கள் என்ற எந்தவித வேறுபாடும் இல்லாமல் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் மிகை ஊதியத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Summary

Only 3 weeks left until Diwali - Why hasn't a bonus been announced for government employees?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER