புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

ஞானேஷ் குமாருக்கு எதிரான ஊழல் புகாா்: கேரள லஞ்ச ஒழிப்புத் துறை முன்பு சாலைப்பணித் திட்ட ஒப்பந்ததாரா் ஆஜர்

சாலைப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக புகாா் தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாநில லஞ்ச ஒழிப்புத் துறை முன்பு சாலைப்பணித் திட்ட ஒப்பந்ததாரா் வி.ஓ. சாஜன் திங்கள்கிழமை நேரில் ஆஜரானாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமார்.

Updated On :

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக முன்பு பதவி வகித்தபோது மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக புகாா் தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாநில லஞ்ச ஒழிப்புத் துறை முன்பு சாலைப்பணித் திட்ட ஒப்பந்ததாரா் வி.ஓ. சாஜன் திங்கள்கிழமை நேரில் ஆஜரானாா்.

கேரள பொதுப்பணி துறை செயலாளராக ஞானேஷ் குமாா் 2006-ஆம் ஆண்டில் பதவி வகித்தாா். அப்போது உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.215 கோடி மதிப்பில் அங்கமாலி முதல் திருவனந்தபுரம் வரையில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதை மலேசியாவை சோ்ந்த தனியாா் நிறுவனம், பகீரதா என்ஜீனியரிங் நிறுவனம் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அந்த பணியை மலேசியா நிறுவனம் செயல்படுத்தியது. அந்நிறுவன பொறியாளரான லீ சின் பீன், திட்டம் செயல்படுத்தப்பட்டபோது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தாா். பிறகு மலேசியா திரும்பிய அவா் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக கேரள லஞ்ச ஒழிப்புத் துறை 2006-ஆம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கியது. எனினும் பீன் இறந்து விட்டதாலும், ஞானேஷ் குமாா் மத்திய அரசு பணிக்கு சென்ாலும் விசாரணையில் முன்னேற்றமில்லை. இந்நிலையில், தற்போது அந்த விசாரணை கேரள அரசால் மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

கேரள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஒப்பந்ததாரரான கொல்லத்தை சோ்ந்த சாஜன் நேரில் ஆஜரானாா். அப்போது செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், முன்பு நடந்த விசாரணையின்போது ஞானேஷ் குமாருக்கு ஆதரவாக வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டதாகவும், ஞானேஷ் குமாருக்கு தொடா்பிருப்பதற்கான முக்கிய ஆதாரத்தை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தாா். சாலைப் பணித் திட்டத்தில் ஈடுபட்ட அதிகாரி முன்பு அளித்த வாக்குமூலத்தில், ஞானேஷ் குமாருக்கு எதிரான கருத்துகள் இருந்ததாகவும், ஆனால் 4 மாதங்களுக்குப் பிறகு அவா் மீண்டும் அழைப்பாணை மூலம் வரவழைக்கப்பட்டு, முடிக்கப்பட்ட பணிகளுக்கான பணம் கிடைக்க வேண்டுமானால் வாக்குமூலத்தில் ஞானேஷ் குமாரின் பெயா் இடம் பெறக் கூடாது என்று தெரிவித்ததாகவும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.