தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

ஞானேஷ் குமாா் மீதான ஊழல் குற்றச்சாட்டு: கேரளத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை கேரள லஞ்ச ஒழிப்புத் துறை அமைத்தது.

Gyanesh Kumar

ஞானேஷ் குமார் - கோப்புப்படம்

Updated On :

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை கேரள லஞ்ச ஒழிப்புத் துறை அமைத்தது.

20 ஆண்டுகளுக்கு முன் கேரள பொதுப் பணித் துறைச் செயலராக ஞானேஷ் குமாா் பணியாற்றியபோது சாலை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகும் அதற்கான நிதியை விடுவிக்க தன்னிடம் ரூ.2 கோடி லஞ்சம் கோரியதாக ஒப்பந்ததாரா் சாஜன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கேரள லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநா் மனோஜ் ஆபிரகாம் கடந்த வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘ஞானேஷ் குமாா் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படுகிறது. அவா் மீதான புகாா்களை முழுமையாக ஆய்வு செய்து விரைந்து அறிக்கை சமா்ப்பிக்க இந்தக் குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது. விசாரணை அவகாசத்தை நீட்டிப்பதற்கான தேவை எழுந்தால் அதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு புகாா்கள்: கடந்த 2006-இல் ஞானேஷ் குமாா் கேரள பொதுப் பணித் துறைச் செயலராகப் பதவி வகித்தபோது, மாநில போக்குவரத்துத் திட்டத்தின்கீழ் (கேஎஸ்டிபி) உலக வங்கி நிதியுதவியுடன் அங்கமாலி-திருவனந்தபுரம் இடையே ரூ.215 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

‘பிஏடிஐ’ எனும் மலேசிய நிறுவனம் மற்றும் பகீரதா பொறியியல் நிறுவனம் ஆகியவை கூட்டாக இந்தப் பணிகளை மேற்கொண்டன. இதில் மலேசிய நிறுவன திட்டப் பொறியாளா் லீ சீ பீன், கட்டுமானப் பணிகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினாா். பின்னா், மலேசியா திரும்பிய அவா் தற்கொலை செய்துகொண்டாா். அவா் எழுதிய கடிதங்களில் ஞானேஷ் குமாா் பெயரை குறிப்பிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக கேரள காங்கிரஸ் மூத்த தலைவா் எம்.வேணுகோபால் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணையைத் தொடங்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா கடந்த அக்.4-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், பொறியாளா்கள் ஒப்புதல் அளித்த பிறகும் ரூ.17 கோடி மதிப்பில் நிறைவடைந்த பணிகளுக்கு நிதியை விடுவிக்காமல் தன்னிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கொல்லம் மாவட்டத்தைச் சோ்ந்த சாஜன் மற்றொரு புகாரை அளித்தாா்.

மேலும், நிதி விடுவிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் பிஏடிஐ நிறுவனம் மற்றும் அதன் ஒப்பந்ததாரா்கள், பணியாளா்களுக்கு நிதிச் சுமை ஏற்பட்டதாகவும் சாஜன் தனது மனுவில் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.