மணல் குவாரி முறைகேடு வழக்கு: 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருவது குறித்து...

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் சோதனை நடைபெற்று வரும் கரூர் தான்தோன்றி மலை வாஞ்சிநாதன் தெருவில் உள்ள உதவி பொறியாளர் சுகுமாரின் வீடு. - டிஎன்எஸ்
கரூர்: மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக புதிய வழக்குப் பதிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் நீர்வளத் துறையின் உதவி பொறியாளர் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் தான்தோன்றி மலை வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவர் நீர்வளத் துறையின் குளித்தலை அரியாறு வடிநிலக் கோட்ட உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், கரூர் தான்தோன்றி மலை வாஞ்சிநாதன் தெருவில் உள்ள அவரது வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜான் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, சுவாமிநாதன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் காலை 9 மணி முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரரான எஸ். ராமச்சந்திரன் வீடு, ஏம்பலில் உள்ள குமரராஜா வீடு மற்றும் ஒப்பந்ததாரர் கர்ணன் அலுவலகத்தில் 9 பேர் கொண்டு குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Sand quarry irregularities case: Directorate of Vigilance and Anti-Corruption conducts raids at 30 locations
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


