தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை! காவலில் எடுக்கப்படும் நபா் 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்நாட்டில் அராஜகத்தைப் பரப்பும் ராகுலுக்கு தக்க பதிலடி: அமித் ஷா உறுதி6 ஆண்டுகள் பணிபுரியும் அக்னிவீரா்கள் ராணுவத்தில் நிரந்தர வீரா்களாக்கப்படுவா்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள்வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கி ஆணைசீனாவின் சாதனையை முறியடிக்கும் ரயில் வழித்தடம்! ரூ. 1.31 லட்சம் கோடியில் அரசு திட்டம்!வானிலை: தமிழகத்தில் நாளை (நவ. 6) கனமழைக்கு வாய்ப்பு!தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவ. 9-ம் தேதி விடுமுறை

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவ. 9-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

koyambedu market

கோயம்பேடு சந்தை - கோப்புப்படம்

Updated On :

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு திங்கள்கிழமை (நவ. 9) ஒரு நாள் முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்கு ஏதுவாக, அதற்கடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.9) தமிழ்நாடு அரசு ஏற்கெனவே பொது விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சந்தை வியாபாரிகள், தொழிலாளா்கள் மற்றும் சுமை தூக்கும் பணியாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வழிவகை செய்யும் நோக்கில் வரும் திங்கள்கிழமை(நவ. 9) கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும், திங்கள்கிழமை (நவ. 9) சந்தை இயங்காது என்பதால், சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை முன்கூட்டியே வாங்கித் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

செவ்வாய்க்கிழமை (நவ.10) முதல் கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Holiday for Koyambedu vegetable market on Nov. 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.