திரையரங்குகளில் காலை 6 மணிக்கு வெளியான சீன், மூக்குத்தி அம்மன் 2!
திரையரங்குகளில் காலை 6 மணிக்கு சீன், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படங்கள் வெளியானது குறித்து...
தமிழகத்தின் திரையரங்குகளில் காலை 6 மணிக்கு திரைப்படங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்ட நிலையில், சூர்யாவின் சீன் மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படங்கள் வெளியாகின.
தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
இதனையடுத்து, திரையரங்குகளில் இன்று காலை 6 மணிக்கு நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் வெளியானது.
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக நஸ்ரியா, வில்லனாக நஸ்லென் நடித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
இதேபோல், சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படமும் இன்று காலை மணிக்கு திரையரங்குகளில் வெளியானது.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அதிகாலை 6 மணிக் காட்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Summary
Actor Suriya's 'Scene' was released in cinema theaters across Tamil Nadu at 6 AM
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

