திடீர் உடல்நலக்குறைவு? கொச்சி நிகழ்வில் பங்கேற்காத சூர்யா!
நடிகர் சூர்யா உடல்நலக்குறைவால் சீன் நிகழ்வில் பங்கேற்கவில்லை...

நடிகர் சூர்யா
கொச்சியில் நடைபெறும் சீன் திரைப்பட நிகழ்வில் நடிகர் சூர்யா கலந்துகொள்ளவில்லையாம்.
நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவ. 6 ஆம் தேதி வெளியாகிறது. முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு தளங்களில் நேற்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான விற்பனையில் அதிரடியாக டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவிற்கு சூர்யாவின் வேகமான டிக்கெட் விற்பனை என்றும் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
சீன் நன்றாக இருந்தால் வணிக ரீதியாக ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்பதால் சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற இருந்த சீன் புரமோஷன் நிகழ்வில் நடிகர் சூர்யா கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் அறிவிப்பால் நீண்ட தூரத்திலிருந்து கொச்சி வந்துகொண்டிருக்கும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகர் சூர்யாவைக் காணவே இவ்வளவு தூரம் பயணிக்கிறோம்; ஆனால், இப்படி ஆகிவிட்டதே என வருத்தமாகப் பதிவிட்டு வருகின்றனர்.
It is said that actor Suriya will not be attending the 'Scene' film event taking place in Kochi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


