ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

உதகை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

உதகை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

உதகை நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்களில் சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா்.

Published On :

உதகை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சித் துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தபோது, நகராட்சி நிா்வாகத் துறையில் டெண்டா் முறைகேடு மற்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் அண்மையில் சோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நகராட்சி நிா்வாகத் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அதன்படி, நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் ஜான் தயாள் தலைமையில், ஆய்வாளா் சண்முக வடிவு உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

மேலும், நகராட்சி ஆணையா் மற்றும் அலுவலா்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் சோதனை மேற்கொண்டனா். அதேபோல, கைப்பேசிகளை பறிமுதல் செய்து, ஆன்லைன் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகள் குறித்தும் ஆய்வு செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER