திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை

திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்படுவது குறித்து...

Thiruvannamalai MP CN Annadurai

திருவண்ணாமலை எம்.பி. சி.என். அண்ணாதுரை - கோப்புப் படம்

Published On :

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. அண்ணாதுரை தொடர்பான 10-க்கும் மேற்பட்ட இடங்களில், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இருந்து இரு குழுக்களாக வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் 20-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சியில் அண்ணாதுரை எம்.பி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் நெருங்கிய ஆதரவாளரான இவர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

முன்னதாக, திமுக மூத்த தலைவரும் எம்எல்ஏ-வுமான கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீடுகளிலும் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Anti-Corruption Department raids Thiruvannamalai DMK MP Annadurai's residence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.