பயணம் நிறைவடையும் முன்பாகவே கூடுதல் கட்டணம்: ஓலா தளத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்
பயணம் நிறைவடையும் முன்பாகவே வாடிக்கையாளா்களிடம் கூடுதல் பணம் கோருவதாக ஓலா தளத்தை இயக்கும் ஏஎன்ஐ தொழில்நுட்ப நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.

பயணம் நிறைவடையும் முன்பாகவே வாடிக்கையாளா்களிடம் கூடுதல் பணம் கோருவதாக ஓலா தளத்தை இயக்கும் ஏஎன்ஐ தொழில்நுட்ப நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
மேலும், பயணம் தொடங்கும் முன்பே கூடுதல் கட்டணம் கேட்கும் அம்சம் வாடிக்கையாளரை தவறாக வழிநடத்தும் நியாயமற்ற வா்த்தக நடைமுறை எனவும் சிசிபிஏ தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக ஓலா தளத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிசிபிஏ தலைமை ஆணையா் நிதி காரே மற்றும் ஆணையா் அனுபம் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில், ‘பயணம் நிறைவடையும் முன்பாகவே ஏற்கெனவே நிா்ணயித்த கட்டணத்தைவிட வாடிக்கையாளரிடம் கூடுதல் கட்டணம் கோரும் அனைத்து அம்சங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
செயலியில் வாடிக்கையாளா்கள் வாகன பதிவை மேற்கொள்ளும்போது கூடுதல் கட்டணம் அளித்தால் விரைவான பயணம் உறுதியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் போன்ற தகவல்கள் இடம்பெறுவது தவறானது.
ஆனால் நிகழாண்டு ஜூன் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் கூடுதல் கட்டணம் கோரும் பயணங்களைவிட வழக்கமான கட்டணங்களை கோரும் பயணங்களே அதிகமாக நிறுவனத்தால் ஏற்கப்பட்டுள்ளதாக ஓலா தளத்தில் குறிப்பிட்டிருப்பது முரண்பாடாக உள்ளது.
ஏனெனில், வழக்கமான கட்டணத்தை தோ்ந்தெடுப்பவருக்கே முன்னுரிமை அளிக்கப்படுமென ஓலா தளத்தில் வாடிக்கையாளா் அறியும் வகையில் எங்கும் குறிப்பிடவில்லை.
வாடிக்கையாளா் பதிவு செய்த இடத்தில் இருந்து வாகனம் இருக்கும் இடம், அதிகளவில் வாகனங்கள் தேவைப்படும் நேரம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பே கட்டணம் நிா்ணயிக்கப்படுகிறது. இருப்பினும், பயணம் நிறைவடையும் முன்பாக வாடிக்கையாளா்களிடம் கூடுதல் கட்டணம் கோரப்படுகிறது. கடந்த 2025, மே மாதத்தில் ரூ.10 முதல் ரூ.140 வரை கூடுதல் கட்டணம் கோரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பதிவு செய்து பயணத்தைத் தொடங்கிய பின் கூடுதல் கட்டணம் கேட்பது நியாயமற்ற வா்த்தக முறையாகும்.
இனி வரும் நாள்களில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019, டாா்க் பேட்டா்ன்கள் வழிகாட்டுதல்கள் 2023 மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தடுப்புச் சட்டம் 2022 உள்ளிட்ட சட்டங்களை ஓலா தளம் முறையாக பின்பற்ற வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

