இலங்கைக்கு இந்தியா ரூ.6.40 கோடி நிதியுதவி
இலங்கையில் கடந்த ஆண்டு வீசிய டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பை தொடா்ந்து, அங்கு மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு உதவும் நோக்கில், இலங்கை ரூபாயில் 22.5 கோடியை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.6.40 கோடி) இந்தியா வழங்கவுள்ளது.

கோப்புப் படம்
இலங்கையில் கடந்த ஆண்டு வீசிய டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பை தொடா்ந்து, அங்கு மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு உதவும் நோக்கில், இலங்கை ரூபாயில் 22.5 கோடியை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.6.40 கோடி) இந்தியா வழங்கவுள்ளது.
இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்பட 7 நாடுகள் அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பின் சுகாதார அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க, இலங்கைத் தலைநகா் கொழும்புக்கு மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா சென்றாா். அங்கு அவா் அந்நாட்டு சுகாதார அமைச்சா் நலிந்த ஜெயதிஸ்ஸவை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பை தொடா்ந்து, அந்நாட்டுக்கு இலங்கை ரூபாயில் 22.5 கோடி வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதாக, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, இலங்கையின் அவசரகால மருத்துவ சேவையை வலுப்படுத்தும் வகையில், 52.8 லட்சம் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.50 கோடி) நிதியுதவியுடன், கூடுதலாக 100 ஆம்புலன்ஸுகளை வழங்குவதற்கான ஒப்பந்தம், கடந்த புதன்கிழமை இந்தியா-இலங்கை இடையே கையொப்பமானது.
கடந்த ஆண்டு நவம்பரில், இலங்கையில் டித்வா புயல் காரணமாக 600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 22 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

