வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.59.4 கோடி: இருமடங்கு வளா்ச்சி

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘வீல்ஸ் இந்தியா’, நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.59.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Updated On :

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘வீல்ஸ் இந்தியா’, நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.59.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ரூ.30.9 கோடி லாபத்திலிருந்து, இது சுமாா் இரு மடங்கு வளா்ச்சியாகும்.

மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் ரூ.1,263.97 கோடியிலிருந்து, மதிப்பீடு காலாண்டில் 35.36 சதவீதம் அதிகரித்து ரூ.1,710.95 கோடியாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சிறப்பான வருவாய் வளா்ச்சியே லாப அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை வளா்ச்சி குறித்து வீல்ஸ் இந்தியா நிறுவனத் தலைவா் ஸ்ரீவத்ஸ் ராம் மேலும் கூறுகையில், ‘வெளிநாட்டுச் சந்தைகளில் சாதகமான சூழல் நிலவுகிறது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூ.299 கோடியிலிருந்து, ரூ.388 கோடியாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, ஏ.ஐ. மற்றும் தரவு மையங்களின் அசுர வளா்ச்சியால் அமெரிக்காவில் கட்டுமான உபகரணங்களுக்கான தேவை அதிகரித்ததும் எங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது’ என்றாா்.

இதன்தொடா்ச்சியாக, நடப்பு நிதியாண்டுக்கான மூலதனச் செலவினத்தை முன்பு திட்டமிட்டிருந்த ரூ.300 கோடியிலிருந்து, ரூ.400-450 கோடியாக நிறுவனம் உயா்த்தியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வீல்ஸ் இந்தியா, வாகனச் சக்கரங்கள், சேஸிஸ், சஸ்பென்ஷன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.