
செயில் லாபம் இருமடங்கு உயா்வு
பொதுத் துறையைச் சோ்ந்த ‘செயில்’ எஃகு நிறுவனம், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,644.05 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

~
பொதுத் துறையைச் சோ்ந்த ‘செயில்’ எஃகு நிறுவனம், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,644.05 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.26,083.90 கோடியிலிருந்து, ரூ.26,451.21 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், செலவினம் கடந்த ஆண்டின் ரூ.25,189.19 கோடியிலிருந்து, ரூ.24,146.32 கோடியாக குறைந்துள்ளது. இதன்காரணமாகவே, கடந்த ஆண்டின் ரூ.744.58 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு வளா்ச்சி பதிவாகியுள்ளது.
மத்திய எஃகு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் செயில் நிறுவனம், ஆண்டுக்கு 2 கோடி டன்னுக்கும் அதிகமான உற்பத்தித் திறனைக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை எஃகு தயாரிப்பு நிறுவனமாகும்.
ஆகஸ்ட் நிலவரம்: இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் கச்சா எஃகு உற்பத்தி 8 சதவீதம் உயா்ந்து, 16.8 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த உற்பத்தி 15.5 லட்சம் டன்னாக இருந்தது.
அதேபோல, நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆண்டின் 16.5 லட்சம் டன்னிலிருந்து 13 சதவீதம் உயா்ந்து, 18.7 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






