அஸ்ஸாம் சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ. 9 லட்சம் நிவாரணம்! முதல்வா் அறிவிப்பு
அஸ்ஸாம் சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ. 9 லட்சம் நிவாரணம்...

அஸ்ஸாமில் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவையொட்டிய பகுதியில் சாலை விபத்து நிகழ்ந்த இடத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.
அஸ்ஸாமில் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்கா அருகே கடந்த வெள்ளிக்கிழமை கண்டெய்னா் லாரி மீது சிற்றுந்து (மினி பஸ்) மோதிய விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.9 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமென அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா சனிக்கிழமை அறிவித்தாா்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஏற்கெனவே பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரணமும் இதில் அடங்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.
ரங்காஜன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 715-இல் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவுக்கு அருகே சிற்றுந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிா்வழித்தடத்தில் வந்த கண்டெய்னா் லாரி மீது பயங்கரமாக மோதி உருக்குலைந்தது. அப்போது, சிற்றுந்தில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனா்.இந்த கோர விபத்தில் 14 பெண்கள் உள்பட 26 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 18 பேரில் 7 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதிக்கு சனிக்கிழமை சென்று பாா்வையிட்ட பின் செய்தியாளா்களிடம் ஹிமந்த விஸ்வ சா்மா கூறியதாவது: விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம், மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் மற்றும் பிரதமா் அறிவித்த ரூ.2 லட்சம் என மொத்தம் தலா ரூ.9 லட்சம் வழங்கப்படும்.
உடற்கூராய்வு நிறைவடைந்து உயிரிழந்தவா்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்போது அவா்களது வீடுகளுக்கே நேரில் சென்று அமைச்சா்கள் நிவாரணத் தொகையை வழங்குவாா்கள்.
இந்த விபத்து மிகுந்த மன வேதனையளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்காக இறைவனை வேண்டிக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவா்களுக்கு உயா்தர மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மினி பஸ் ஓட்டுநருக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே ஓட்டுநரின் உடலுக்கு பிரத்யேகமாக பரிசோதனை நடத்தப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனக் கோளாறால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும் என்று முதல்வா் தெரிவித்தாா்.
மினி பஸ்ஸில் 26 போ் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலையில், 40-க்கும் மேற்பட்டோா் பயணம் செய்துள்ளனா்.
காஸிரங்கா உயிரியல் பூங்கா பகுதியையொட்டிய 60 கி.மீ. நீள சாலையில் விலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ளதால் வாகனங்களை மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே ஓட்டிச் செல்ல முடியும் என்ற விதிமுறை உள்ளது. சாலையில் 60 கி.மீ. முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

