திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்! மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!

நாடு முழுவதும் காலியாக உள்ள 7,300 நீதிபதி பணியிடங்கள்; 5.8 கோடி வழக்குகள் தேக்கம்

நீதிபதிகளுக்கான பணியிடங்களில் நான்கில் ஒரு பங்கு இடங்கள் காலியாக இருக்கும்போது, ​​எவ்வாறு விரைவான நீதி வழங்க முடியும்..?

7,300 judicial vacancies; 5.8 crore cases pending in India

நாடு முழுவதும் காலியாக உள்ள 7,300 நீதிபதி பணியிடங்கள் - கோப்புப்படம்

Updated On :

புதுதில்லி: நாடு முழுவதும் நீதித்துறையில் மாவட்ட நீதிமன்றங்களில் 7,300-க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்களும், உயர்நீதிமன்றங்களில் சுமார் 300 நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளதால், 5.8 கோடிக்கும் அதிகமாக வழக்குகள் நிலுவலையில் உள்ளதால், நீதித்துறை கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும் நீதி வழங்கும் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலை தேசிய நீதித்துறை தரவுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது, ​​உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களில் சுமார் 25 சதவீதம் காலியாக உள்ளன. கீழ்நிலை நீதித்துறையில் 2,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

உடனடித் தீர்வு காணப்பட வேண்டும்

நீதிமன்ற அறைக்கு வெளியே, நீதிபதி விடுமுறையில் இருப்பதாகவோ அல்லது அந்தப் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்புகள் காணப்படுவதால் வழக்கு சார்ந்த நூற்றுக்கணக்கான கோப்புகள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நீதிக்காக வெளியே நூற்றுக்கணக்கான மனுதாரர்கள் காத்திருக்கின்றனர்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்ட நிபுணர்கள், இந்தப் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இதற்கான தீர்வு எளிமையானது மற்றும் தவிர்க்க முடியாதது

நீதிபதி நியமனங்களை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். மேலும், கொலீஜியம் முறையை வெளிப்படையானதாக மாற்றுவது உள்ளிட்ட பிற சிக்கல்களுக்கும் விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும்.

இது சட்டத்தின் தோல்வியல்ல

"இது சட்டத்தின் தோல்வி அல்ல; இது நீதிபதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தோல்வி" என்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஆர். சிங் கூறியுள்ளார்.

காலதாமதமே காரணம்

இதற்கு மிக முக்கியமான மூல காரணம் காலதாமதம்தான். ஒரு நீதிபதி எப்போது ஓய்வு பெறுவார் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருந்தும், அந்த இடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் அவர்கள் ஓய்வுபெற்ற பிறகுதான் தொடங்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு கோப்பு உயர்நீதிமன்ற கொலீஜியத்திலிருந்து சட்ட அமைச்சகத்திற்குச் சென்று, அங்கிருந்து உளவுத்துறைக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் உயர்நீதிமன்ற கொலீஜியத்திற்கு வந்து, பிறகு உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்குச் சென்று, இறுதியாக அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த நீண்ட பயணத்திற்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள், சில சமயங்களில் மூன்று ஆண்டுகள் கூட ஆகிறது. அதாவது, ஒரு காலிப்பணியிடம் நிரப்பப்படுவதற்குள், ​​மேலும் இரண்டு புதிய காலிப்பணியிடங்கள் உருவாகிவிடுகின்றன. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆறு மாதங்களுக்கு முன்பே பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்

முன்னணி சட்ட நிபுணரும், முன்னாள் கூடுதல் அரசு வழக்குரைஞரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான கே.சி. கௌசிக் கூறுகையில், ஒரு பணியிடம் காலியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, உயர்நீதிமன்ற கொலீஜியம் பெயர்களைப் பரிந்துரைத்து உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் இதற்கான செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் 60 நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். "உச்ச நீதிமன்ற கொலீஜியம் 90 நாள்களுக்குள் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை அரசாங்கம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றால், அந்தப் பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டதாகவே கருதப்பட வேண்டும். எந்தவொரு காலிப்பணியிடமும் ஆறு மாதங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் இருக்கக்கூடாது" என்று அவர் கூறினார்.

காரணங்களை வெளியிட வேண்டும்

ஒரு குறிப்பிட்ட வழக்குரைஞர் நீதிபதி பதவிக்கு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றொருவர் ஏன் நிராகரிக்கப்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்பதை வலியுறுத்திய கௌசிக், "தேர்வுக்கான தகுதிகளை வெளியிட வேண்டும், பரிசீலிக்கப்பட்டவர்களின் பெயர்கள், ஒருவரைத் தவிர்ப்பதற்கான காரணங்களை வெளியிட வேண்டும். வெளிப்படைத்தன்மை தகுதியானவர்களை முன்னிறுத்தும் என்று கூறினார்.

நீதி வழங்குவதில் நேரடி பாதிப்பு

பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான நீதிபதி அஞ்சனா பிரகாஷ் கூறுகையில், நீதிபதிகள் நியமனம் சரியான நேரத்தில் நடைபெறவில்லை என்றால், அது நீதி வழங்குதலை நேரடியாகப் பாதிக்கும்.. ஏனெனில், நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால், பல வழக்குகளுக்கு தீர்வு காண முடியாமல் போகிறது.

விரைவான நீதிக்கான நம்பிக்கைக்கு நேரடி அடி

சிவில் வழக்குகள் முதல் குற்றவியல் மேல்முறையீடுகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் என ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கின்றன. நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பது, விரைவான நீதி கிடைக்கும் என்ற வாக்குறுதிக்கு விடுக்கப்படும் நேரடி அடியாகும். இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எப்படி விரைவான நீதி வழங்க முடியும்?

தற்போது, ​​உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களில் சுமார் 25 சதவீதம் காலியாக உள்ளன. கீழ் நீதிமன்றங்களில் 2,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சில உயர்நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நீதிபதிகளுக்கான பணியிடங்களில் நான்கில் ஒரு பங்கு இடங்கள் காலியாக இருக்கும்போது, ​​எவ்வாறு விரைவான நீதி வழங்க முடியும்? என்று அஞ்சனா பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலுவையில் உள்ள 65.5 லட்சம் வழக்குகள்

தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் தரவுகளின் படி, நாட்டில் அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும் 64 முதல் 65.5 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு அனுமதிக்கப்பட்ட 1,122 நீதிபதி பணியிடங்களில், சுமார் 300 முதல் 350 இடங்கள் காலியாக உள்ளன.

சமீபத்திய தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் தரவு மற்றும் நீதிமன்றப் பதிவேட்டுத் தகவல்களின்படி, நவம்பர் 2026 நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் ஏறக்குறைய 93,000 முதல் 95,000 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 64 முதல் 65.5 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் மட்டும் ஏறக்குறைய 18,375 சிவில் வழக்குகளும், சுமார் 73,967 குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தேவையற்ற ஒத்திவைப்பு- காலதாமதங்களே காரணம்

அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோவிந்த் மாத்தூர் கூறுகையில், வழக்குகள் தீர்க்கப்படுவதில் ஏற்படும் தாமதத்திற்கு, அரசாங்கமும் அதன் அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்காததே முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

"நாட்டில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதன் முகமைகளின் வழங்குள்; இருப்பினும், வழக்குகளை உரிய காலத்தில் முடித்து வைப்பது என்பது அவற்றின் முன்னுரிமைப் பட்டியலில் மிகக் கடைசியிலேயே உள்ளது. அரசுத் துறைகளும் முகமைகளும் பெரும்பாலும் திறமையற்ற, போதிய தயாரிப்பின்மை இல்லாத வழக்குரைஞர்களைக் கொண்டுள்ளன. இவர்களால் நீதிமன்றங்களுக்குச் சரியான முறையில் உதவவோ அல்லது தங்களுக்குச் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்குச் சரியான சட்ட ஆலோசனைகளை வழங்கவோ முடிவதில்லை. இத்தகைய குறைபாடுகளே, நீதித்துறைச் செயல்பாட்டில் தேவையற்ற ஒத்திவைப்பு மற்றும் காலதாமதங்களுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளது" என்று ஜெர்மனியிலிருந்து 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

How can justice be delivered when one-fourth of the chairs are empty?, Justice Prakash questioned.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.