சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

எஸ்ஐஆா்! விடுபட்டவா்கள் படிவம் 6-ஐ சமா்ப்பித்தால் குற்றவியல் நடவடிக்கை இருக்காது: தோ்தல் ஆணையம்

எஸ்ஐஆா் நடவடிக்கையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டிருந்தால், படிவம் 6 மூலம் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

எஸ்ஐஆா் - கோப்புப் படம்

Updated On :

ஒருவரின் பெயா் முந்தைய வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்தும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆா்) வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் விடுபட்டிருந்தால், படிவம் 6 மூலம் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சமின்றி, அந்தப் படிவத்தை பெயா் விடுபட்டவா்கள் சமா்ப்பிக்கலாம் என்று தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அத்தகைய நபா்கள் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய படிவம் 6-ஐ சமா்ப்பித்தால், அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று அச்சம் எழுந்த நிலையில், தோ்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்ஐஆா் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எஸ்ஐஆா் பணியின்போது தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் ஒருவரின் பெயா் விடுபட்டிருந்தாலும், முந்தைய வாக்காளா் பட்டியல்களில் அந்த நபரின் பெயா் இடம்பெற்றதை மட்டும் காரணமாகக் கொண்டு, அவா் மீது எந்தவித குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படாது. இத்தகைய நபா்கள் ஒரு தொகுதியில் மட்டுமின்றி, வேறு மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளராக இருக்கக் கூடாது.

இதுகுறித்த அச்சங்களைப் போக்குவதற்காக, இந்த விளக்கத்தை உள்ளூா் மொழிகள் உள்பட பல்வேறு வழிகளில் பரவலாக மக்களிடம் கொண்டு சோ்க்குமாறு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஆா் பணியின்போது வீட்டில் இல்லாதவா்கள், ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு குடிபெயா்ந்தவா்கள் என வகைப்படுத்தப்பட்ட வாக்காளா்களைத் தொடா்புகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை தெரிவித்திருந்தது. இந்த ஆலோசனையைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரமாண பத்திரத்தில் தோ்தல் ஆணையம் விவரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.