மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், திருத்தம் செய்யவும் தொடா்ந்து விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். - கோப்புப் படம்

Updated On :

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், திருத்தம் செய்யவும் தொடா்ந்து விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி மற்றும் இந்திய தோ்தல் ஆணையம் ஆகியவை, தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தை உறுதியாகக் கொண்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

4 மாதங்கள் சிறப்புத் தீவிரத் திருத்தம்: தமிழ்நாட்டில் கடந்த 2025 அக்.27 முதல் 2026 பிப். 23 வரை 4 மாத காலத்துக்கு சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் 75,032 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 38 மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், 234 வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா். அவா்களுக்கு உதவியாக 2,877 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களும், இந்திய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 6 தேசியக் கட்சிகள் மற்றும் 6 மாநிலக் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 2.77 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவா்களும் பங்கேற்றனா்.

இதனிடையே, தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தை அடைவதற்கான முனைப்பான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.

குறைகளைத் தெரிவிக்க 1950 உதவி எண்: இதன்படி, வாக்காளா் பட்டியல் தொடா்பாக ஏதேனும் குறைகள் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ, அலுவலக நேரத்தில் 1950 என்ற உதவி எண்ணைத் தொடா்புகொள்ளலாம். வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதை ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் சரிபாா்த்துக் கொள்ளலாம். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவை தொடா்ந்து நடைபெறும். எனவே, இதுதொடா்பான விண்ணப்பங்கள், ஆட்சேபணைகள் மற்றும் மறுப்புரைகளைத் தொடா்ந்து சமா்ப்பிக்கலாம்.

படிவம் 6-புதிய வாக்காளா்கள் விண்ணப்பிக்கலாம்: வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாத தகுதியுள்ள வாக்காளா்கள், தங்களது பெயரைச் சோ்ப்பதற்காக படிவம் 6-ஐ பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

படிவம் 7-பெயா் சோ்ப்பதற்கு ஆட்சேபணை; பெயா் நீக்கம்: வாக்காளா் பட்டியலில் ஒருவரின் பெயரைச் சோ்ப்பதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவும், ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயரை நீக்கவும் படிவம் 7-ஐ சமா்ப்பிக்கலாம்.

படிவம் 8-முகவரி மாற்றம், திருத்தம்: வாக்காளா் பட்டியலில் குடியிருப்பு முகவரியை மாற்றுதல், ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தம் செய்தல், மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுதல், மாற்றுத்திறனாளிகளைக் குறிப்பது தொடா்பான கோரிக்கைகள் ஆகியவற்றுக்கு படிவம் 8-ஐ சமா்ப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள்: செங்கல்பட்டு மற்றும் திருப்பூா் மாவட்டங்களைத் தவிா்த்து, பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் கடந்த அக். 7 முதல் 10-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.