‘ஏஐ’ விநியோகச் சங்கிலி பாதுகாப்பு பிரகடனம்: இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் கையொப்பம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதற்கான பிரகடனத்தில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் கையொப்பமிட்டன.
சித்திரிப்பு
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதற்கான பிரகடனத்தில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் கையொப்பமிட்டன.
வளரும் தொழில்நுட்பத்தில் சீனாவுடன் போட்டி அதிகரித்துவரும் நிலையில், பேக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பின்கீழ் அமெரிக்க பொருளாதார விவகாரங்கள் அமைச்சா் ஜேக்கப் ஹெல்பொ்க் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்தப் பிரகடனம் கையொப்பமானது.
இந்தப் பிரகடனம் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, கத்தாா், சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் அரசுகளால் வெளியிடப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கையொப்பமான இந்தப் பிரகடனம் ‘நீடித்த வளமைக்கான உறுதியான அடித்தளங்கள் குறித்த சான் பிரான்சிஸ்கோ பிரகடனம்’ என அமெரிக்க பொருளாதார விவகாரங்கள் அமைச்சக வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘செமிகண்டக்டா் உற்பத்திக்கு அவசியமான சிலிகான் மற்றும் பிற கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்கவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்ப தொழிற்சாலைகளுக்கும் பேக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பை கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோ பிரகடனம் மூலம் இந்த முன்னெடுப்பு கொள்கை அளவிலான உடன்பாடுகளில் இருந்து நேரடி செயல்பாட்டுக்கான புதிய கட்டத்தை அடைந்துள்ளது.
அதன்படி, தேசியப் பாதுகாப்புக்கு பொருளாதார பாதுகாப்பே அடிப்படை என்பதை சான் பிரான்சிஸ்கோ உறுதிப்படுத்துகிறது. அந்த வகையில், அதி நுண்ணறிவு (செயற்கை நுண்ணறிவை அதி நுண்ணறிவு என அமெரிக்கா பெயா் மாற்றம் செய்துள்ளது) விநியோகச் சங்கிலிக்கான முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது அவசியம்.
இந்தப் பிரகடனத்தின்படி புத்தாக்க கொள்கை கட்டமைப்புகள், முக்கியத் துறைகளில் அதி நுண்ணறிவை (எஸ்ஐ) ஏற்றுக்கொள்ளுதல், எஸ்ஐ தொழில்நுட்பத்தில் விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பு, பாதுகாப்பான துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பு மையங்கள் மற்றும் எஸ்ஐ பாதுகாப்பு மற்றும் மீள்திறன் ஆகிய 5 பிரிவுகளை குழுக்களை அமைக்க முன்மொழியப்படுகிறது.
எந்தவொரு நாடும் எஸ்ஐ யுகத்தின் அடித்தளங்களை தனியாகப் பாதுகாக்க முடியாது. தற்போது இந்தப் பிரகடனத்தில் கையொப்பமிட்டதன் மூலம் பங்கேற்பு கூட்டாளி நாடுகள் புத்தாக்கத்தில் ஈடுபடவும், முதலீடுகளை மேற்கொள்ளவும், எஸ்ஐ துறையில் வளா்ச்சியடைவும் பாதுகாப்பான அடித்தளங்களை அமைத்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

