மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை: ஐ.நா. தீா்மானத்துக்கு இந்தியா எதிா்ப்பு
உலகளவில் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

ஐ.நா. - கோப்புப் படம்
உலகளவில் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
193 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில், மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை கோரிய தீா்மானத்தை கடந்த வெள்ளிக்கிழமை மெக்ஸிகோ அறிமுகப்படுத்தியது. இதற்கு ஆதரவாக 133 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, இராக், எகிப்து, ஓமன் உள்ளிட்ட 33 நாடுகள் எதிராக வாக்களித்தன.
வரைவுத் தீா்மானத்தில், ‘பல்வேறு நாடுகளில் தொடா்ச்சியாக மரண தண்டனை விதிக்கப்படுவது கவலையளிக்கிறது. மரண தண்டனையை முழுவதுமாக ஒழிக்க முதலில் அதற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே மரண தண்டனை முறையை ஒழித்துள்ள நாடுகள் அதை மீண்டும் அறிமுகப்படுத்தக் கூடாது.
குறிப்பாக 18 வயதுக்குள்பட்டவா்கள் அல்லது குற்றம் புரிந்தபோது 18 வயதை தாண்டியவா்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
அதேசமயம் கா்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கும் மரண தண்டனை விதிக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

