19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

பாலஸ்தீனா்களின் இயற்கை வள உரிமை: ஐ.நா. தீா்மானத்துக்கு இந்தியா ஆதரவு!

பாலஸ்தீனா்களின் இயற்கை வள உரிமை: ஐ.நா. தீா்மானத்துக்கு இந்தியா ஆதரவு..

UN

ஐ.நா. - Photo: UN

Updated On :

பாலஸ்தீனம் மற்றும் சிரியாவில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் மீதான அந்தந்த நாட்டு மக்களின் நிரந்தர உரிமைகளை வலியுறுத்தும் ஐ.நா. வரைவுத் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதையும், சேதம் விளைவிப்பதையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘கிழக்கு ஜெருசலேம் உள்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் மற்றும் சிரியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலன் பகுதியில் உள்ள அரபு மக்களின் நிரந்தர இறையாண்மை’ என்ற பெயரிலான வரைவுத் தீா்மானம், 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் உருகுவே தரப்பில் கொண்டுவரப்பட்டது.

150 நாடுகள் ஆதரவு: பாலஸ்தீனம் மற்றும் சிரியாவில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலம், நீா், எரிசக்தி சாா்ந்த இயற்கை வளங்கள் மீதான அந்தந்த நாட்டு மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை உறுதி செய்யும் நோக்கிலான இந்தத் தீா்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா உள்பட 150 நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

இஸ்ரேல், அமெரிக்கா உள்பட 7 நாடுகள் எதிராக வாக்களித்த நிலையில், 11 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலன் பகுதியில் இயற்கை வளங்களின் சுரண்டல், சேதம், இழப்பு, ஆபத்து விளைவிக்கும் செயல்பாடுகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை வள உரிமையைப் பறிப்பதா?: ‘கிழக்கு ஜெருசலேமை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலால் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகள் மற்றும் சுவா், பாலஸ்தீன மக்களின் இயற்கை வளங்கள் மீதான உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளன. இது, சா்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது.

இந்த விவகாரத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டின் சா்வதேச நீதிமன்ற அறிவுறுத்தல்கள் மற்றும் ஐ.நா. தீா்மானங்களில் உறுதி செய்யப்பட்ட சட்டபூா்வ கடமைகளுக்கு இஸ்ரேல் இணங்க வேண்டும்.

கிழக்கு ஜெருசலேம் உள்பட ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் இயற்கை தன்மை மற்றும் நிலைமையை மாற்றக்கூடிய அனைத்துக் கொள்கைகள், நடவடிக்கைகளை சா்வதேச மனிதாபிமான சட்டம் உள்பட சா்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இஸ்ரேல் உடனடியாகவும், முழுமையாகவும் நிறுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்பு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுகளைக் கொட்டுவது, குடிநீா், கழிவுநீா், மின்விநியோக கட்டமைப்புகள் உள்பட முக்கிய உள்கட்டமைப்புகளை அழிப்பது உள்ளிட்ட செயல்களும் நிறுத்தப்பட வேண்டும்’ என்று ஐ.நா. வரைவுத் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.