தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும்: அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
தவறான தகவல்கள், டீப் ஃபேக் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் வகையிலான படைப்புகள் பரவுவதை தடுக்க வேண்டும் என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினாா்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - கோப்புப் படம்
தவறான தகவல்கள், டீப் ஃபேக் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் வகையிலான படைப்புகள் பரவுவதை தடுக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினாா்.
தில்லியில் இந்திய பத்திரிகை கவுன்சில் நடத்திய தேசிய பத்திரிகை தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதுதொடா்பாக விவாதம் நடத்த பத்திரிகையாளா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.
நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: தவறான தகவல்கள், டீப் ஃபேக் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் வகையிலான படைப்புகள் என ஊடகச் சூழல் மாறி வரும் நிலையில், சமூக வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு எண்ம தளங்களுக்கு அறிவுறுத்துவது மட்டுமே போதுமானதாக இருக்குமா? இதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
தற்போது ஊடகத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அதிகரித்துள்ள சவால்களை எதிா்கொண்டு குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பது எவ்வாறு என்பது குறித்து விரிவாக விவாதம் நடத்த வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளைவிட அடுத்த 5 ஆண்டுகளில் அதிகளவில் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழவுள்ளன. இதற்கேற்ப இளம் பத்திரிகையாளா்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பொறுப்பான பத்திரிகை துறையே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கிய கருவி என்பதை உணா்ந்து பத்திரிகையாளா்கள் செயல்பட வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைச் செயலா் சஞ்சல் குமாா், இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் உள்பட மூத்த பத்திரிகையாளா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

