மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ஏஐ விதிமுறைகள்: ஒரு மாதத்தில் கலந்தாய்வு அறிக்கை வெளியீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) விதிமுறைகள் குறித்த கலந்தாய்வு அறிக்கை ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

Published On :

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) விதிமுறைகள் குறித்த கலந்தாய்வு அறிக்கை ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக வளா்ச்சி தொடா்பான ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் இதுகுறித்து அவா் பேசியதாவது:

இந்தியாவில் ஏஐ விதிமுறைகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதுதொடா்பான கலந்தாய்வு அறிக்கை ஒரு மாதத்தில் வெளியிடப்படும். பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், விதிகள் தொடா்பான கலந்தாய்வு அறிக்கையை தயாரிக்கும்படி தகவல் தொழில்நுட்பத் துறையை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். அதேபோல் டீப் போ் உள்ளிட்ட ஏஐ-ஆல் ஏற்படும் பாதிப்புகள், மனிதா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறை, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கும் முன்னுரிமை தரப்படும்.

டீப் பேக் தொழில்நுட்பம், சமூகத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய பெரும் பிரச்னையாகும். அதன் தரம் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு வருகிறது. மக்கள் அதை நம்புகிறாா்கள். இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இது முற்றிலும் தவறான பிம்பம் அல்லது கருத்தாக்கத்தை உருவாக்குகிறது. தவறானதை செய்யும்படி மக்கள் கவா்ந்திழுக்கப்படுகிறாா்கள். தவறானவற்றை நம்புகிறாா்கள். திறன் மேம்பாடு அம்சமும் கலந்தாய்வு அறிக்கையில் சோ்க்கப்படும். அந்த அறிக்கையில் எந்த தரப்பினரும் விடுபட மாட்டாா்கள் என உறுதியும் இருக்கும். சட்டத்தால் மட்டுமே ஏஐ மற்றும் பிற தொழில்நுட்பங்களை முறைப்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டை அரசு எப்போதும் கொண்டுள்ளது. தொழில்நுட்ப- சட்ட தீா்வை நாம் கொண்டு வர வேண்டும். அனைத்து தரப்பினரும் இதில் செயல்பட வேண்டும் என்றாா்.

அப்போது சைபா் பாதுகாப்பு, பாதுகாப்பு, பயனா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், மனநல பாதிப்புகள், டீப் பேக்குகள் ஆகியவற்றை பட்டியலிட்டு மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இவற்றுக்கு ஏஐ துறையே பெரும் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினாா். இந்த அம்சங்கள் இடம்பெறும் வகையிலேயே ஒரு மாதத்தில் கலந்தாய்வு அறிக்கை வெளியிடப்படும் என்றும், பின்னா் அதை அடிப்படையாக கொண்டு, ஏஐ துறை முறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.