இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! நினைவுகளைப் பகிர்ந்த சோனியா!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடும் கோபக்காரர் என்று சோனியா காந்தி பேசியது குறித்து...

Belonging: A Journey of Love

சோனியா காந்தி - PTI

Updated On :

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடும் கோபக்காரர் என்றும் ராகுல், பிரியங்கா காந்தி பிறந்த பிறகு அவர் முற்றிலும் மாறிவிட்டதாக சோனியா காந்தி இன்று (நவ. 16) தெரிவித்தார்.

ராஜீவ் காந்தியை திருமணம் செய்துகொண்டு வந்த பிறகு ஆரம்பத்தில் இந்திரா கந்தியை அம்மா என்று அழைக்க தயங்கியதாகவும், ஆனால் பின்னர் அம்மா என்றே அவரை அழைத்ததாகவும் குறிப்பிட்டார்.

‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் 526 பக்கங்கள் கொண்ட சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் கடந்த 10 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது.

இந்தப் புத்தகத்தில், சோனியா காந்தியின் இளமைப்பருவம், காதல், தனிப்பட்ட வாழ்க்கை, உடல் நலம், ராஜீவ் காந்தி, குழந்தைகள், இந்திரா காந்தி, அரசியல் வாழ்வு என பல விவகாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்புத்தகம் விற்பனைக்கு வந்த நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று (நவ. 16) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுடன் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரின் மனைவி டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் புத்தகத்தை வெளியிட்டு சோனியா காந்தியிடம் புத்தகம் குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதில் அளித்து சோனியா காந்தி பேசியதாவது:

''என் சுயசரிதை புத்தகத்துக்கு மக்களிடம் மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கண்டு ஆரம்பத்தில் பயந்தேன். அவரை எப்படி அணுகுவது, என்ன சொல்வது என்று எனக்குப் புரியவில்லை.

என் கணவரும் அவரது சகோதரர் சஞ்சய் காந்தியும் அவரை அம்மா என்று அழைப்பதால், நானும் அவ்வாறு அழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். ஆனால் அதை நான் முற்றிலும் செய்யப்போவதில்லை.

ஏனென்றால் எனக்கு ஒரே ஒரு அம்மாதான். அது என் இத்தாலிய அம்மா மட்டும்தான். அம்மா என்று அழைக்காமல் மறைமுகமாக அவரை அணுகுவதற்கான வழியைத் தேடி அலைந்தேன்.

பின்னர், மெதுவாக நான் அவரை அறிந்ததால், பிறகு அம்மா என்றே அழைத்தேன். ஆனால், அதற்கு நேரம் எடுத்துக்கொண்டது.

அவர் வலிமையானவர். ஆரம்பத்தில் நான் அவரைப் பார்த்து பயந்தேன். ஏனென்றால் எப்போதாவது, அவர் கோபமடைந்தாள், அது எனக்கு என் தந்தையை நினைவுபடுத்தியது.

அதனால் நான் உறைந்து போனேன். புயல் முடியும் வரை என் கணவரும் அவரது சகோதரர் சஞ்சயும் அமைதியாக அமர்ந்து காத்திருப்பார்கள்.

ஆனால், ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பிறந்த பிறகு அவர் முற்றிலும் மாறிவிட்டார். வழக்கமான பாட்டி மாதிரி மிகவும் மென்மையானவராகிவிட்டார்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.