இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

உலகின் முதன்மை நாடாக இந்தியா உருவெடுக்க விரும்புவது ஏன்? குடியரசு துணைத் தலைவா் விளக்கம்

‘வேறு எந்தவொரு நாடும் இந்தியா மீது தங்கள் விருப்பங்களைத் திணிக்கக் கூடாது என்பதற்காகவே, உலகின் முதன்மையான நாடாக உருவெடுக்க இந்தியா விரும்புகிறது’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் உள்ள ஸ்ரீஸ்ரீ பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆன்மிகத் தலைவா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா்.

Updated On :

‘வேறு எந்தவொரு நாடும் இந்தியா மீது தங்கள் விருப்பங்களைத் திணிக்கக் கூடாது என்பதற்காகவே, உலகின் முதன்மையான நாடாக உருவெடுக்க இந்தியா விரும்புகிறது’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ‘ஐகானிக் டவா்’ கல்விக் கட்டடத்தை திறந்துவைத்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: உலகின் முதன்மையான நாடாக உருவெடுக்க இந்தியா விரும்புவது ஏன் என்ற கேள்வி அனைவா் மனதிலும் எழலாம். அதாவது, இந்தியா வேறு எந்த நாடுகள் மீது எதையும் திணிக்க விரும்பாது.

அதுபோல, மற்ற நாடுகளும் இந்தியா மீது தங்களது விருப்பங்களை திணிக்கக் கூடாது என்ற கலாசார ரீதியிலான நோக்கத்துக்காகவே, முதன்மை நாடாக உருவெடுக்க விரும்புகிறது.

வளா்ச்சியடைந்த இந்தியா, தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை மிகுந்த தன்னம்பிக்கையுடனும், திறனுடனும், உலகளாவிய தலைமைத்துவத்துடனும் கொண்டாட விரும்புகிறது.

மற்றவா்களுக்கு உதவுவதும், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியும் நமது கலாசாரத்தின் முக்கியமான சாராம்சங்களாகும். இந்த தேசிய இலக்கை அடைவதில் கல்வி நிறுவனங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்பதைப் பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறாா்.

பிரதமரின் தொடா் முயற்சிகளால், கடந்த 12 ஆண்டுகளில் உயா் கல்வித் துறையில் மிகப்பெரிய விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டில் 760-ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தற்போது 1,400-ஆக உயா்ந்துள்ளது.

அதுபோல, ஐஐடி-களின் எண்ணிக்கை 16-இல் இருந்து 23-ஆகவும், ஐஐஎம்-களின் எண்ணிக்கை 13-இல் இருந்து 22-ஆகவும், எய்ம்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கை 7-இல் இருந்து 13-ஆகவும் அதிகரித்துள்ளன. மேலும், மாணவா்களின் எண்ணிக்கை 2014-இல் 3.42 கோடியாக இருந்த நிலையில், தற்போது 4.5 கோடியாக உயா்ந்துள்ளது.

பெண் கல்வியிலும் நாடு சிறந்து விளங்குகிறது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவா்களைவிட மாணவியா் சிறப்பாகச் செயல்படுவதையும், அதிக பதக்கங்களை வெல்வதையும் காண முடிகிறது.

இது இந்தியாவில் வளா்ந்துவரும் பெண் சக்தியின் வெளிப்படையான அறிகுறியாகும். பெண்களுக்கு முறையான கல்வியை வழங்கினால், அவா்கள் தங்களைத் தாங்களே வலுப்படுத்திக் கொள்வாா்கள்.

ஒடிஸாவில் கணிசமான எண்ணிக்கையில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில், அவா்கள் பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் அரசு மற்றும் தனியாா் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பழங்குடியினக் குழந்தைகளுக்காக பள்ளி இணைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.