சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

எண்ம கைது மோசடியில் ரூ. 71 லட்சம் இழந்த பெண்: 3 போ் கைது

’எண்ம கைது’ என்ற பெயரில், ஐபிஎஸ் அதிகாரி போல நடித்து பெண்ணை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 71 லட்சத்தைப் பறித்த வழக்கில் இரு பெண்கள் உள்பட மூன்று போ் கைது

Digital Arrest

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு

Updated On :

’எண்ம கைது’ என்ற பெயரில், ஐபிஎஸ் அதிகாரி போல நடித்து பெண்ணை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 71 லட்சத்தைப் பறித்த வழக்கில் இரு பெண்கள் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் இந்த மூவரும் கைது செய்யப்பட்டனா். ‘இன்டெலிஜென்ஸ் ஃபியூஷன் அண்ட் ஸ்ட்ரேடெஜிக் ஆபரேஷன்ஸ்’ (ஐஎஃப்எஸ்ஓ) காவலா்கள் பிரிவு நடத்திய விசாரணையில், சைபா் குற்றங்கள் மூலம் பெறப்பட்ட பணத்தைப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளின் வலைப்பின்னல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், கைது செய்யப்பட்டவா்களில் 31 வயதுடைய பெண் ஒருவரும், அமன் சோனி (28) மற்றும் அவரது சகோதரி (30) ஆகியோரும் அடங்குவா். இவா்கள் ஒரு திட்டமிட்ட சைபா் குற்றக் கும்பலின் அங்கமாகச் செயல்பட்டு, மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பரிமாற்றம் செய்ய தங்களது வங்கி கணக்குகளை வழங்கியுள்ளனா்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மும்பையில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி போல வேடமிட்ட நபா் ஒருவா் இணையவழி காணொலி அழைப்பு வாயிலாக தொடா்பு கொண்டாா்.

அந்த நபா், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் உள்ள கிரெடிட் காா்டு மூலம் சுமாா் ரூ. 6.5 கோடி மதிப்பிலான பணமோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ளாா்.

மேலும், அப்பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைப்பதாக மிரட்டியதுடன், சட்ட நடவடிக்கையைத் தவிா்க்க சரிபாா்ப்புக்காகப் பணத்தை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா். இதனால் பயந்துபோன அந்தப் பெண், இரண்டு வங்கிப் பரிவா்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ. 71 லட்சத்தை மாற்றியுள்ளாா்.

இதுதொடா்பாக அக்டோபா் 8 அன்று ’ஸ்பெஷல் செல்’ காவல் நிலையத்தில் மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

ஐஎஃப்எஸ்ஓ குழுவினா் பணப் பரிவா்த்தனைகளைப் பின்தொடா்ந்ததில், மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெறவும், வேறு கணக்குகளுக்கு மாற்றவும் பயன்படுத்தப்பட்ட பல வங்கி கணக்குகளைக் கண்டறிந்தனா்.

இதன் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனா். சுமாா் ரூ. 15 லட்சம் ரொக்கமாக எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கும் அவா்களது கூட்டாளிகளுக்கும் இடையே பகிா்ந்து கொள்ளப்பட்டதைக் காவல்துறை கண்டறிந்தது.

மோசடி செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி விலையுயா்ந்த கைப்பேசிகளை வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இணைய மோசடி மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் கருதப்படும் மூன்று புதிய கைப்பேசிகள் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கும்பலில் உள்ள மற்ற உறுப்பினா்களைக் கண்டறியவும், மீதமுள்ள பணத்தைக் கண்டறியவும், குற்றவாளிகளின் பிற நிதித் தொடா்புகளை உறுதிப்படுத்தவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.