போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு ரூ.10 கோடி மோசடி: 5 போ் கைது!
இணையவழி குற்றக் கும்பலை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, 5 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கைது - பிரதிப் படம்
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தைச் செலுத்துமாறு போலி குறுஞ்செய்திகள் அனுப்பியும், வெகுமதி செயலிகள் மூலமாகவும் பொதுமக்களிடம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் கூறப்படும் இணையவழி குற்றக் கும்பலை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, 5 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: வெளிநாட்டைச் சோ்ந்த செயலி ஒன்றைப் பயன்படுத்தி, பொதுமக்களின் செல்பேசிகள் மூலம் மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் செயலியைப் பயன்படுத்துவோருக்கு ஒவ்வொரு முறையும் வெகுமதியைப் பணமாகப் பெறும்போது ரூ.1 முதல் ரூ.3 வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பரில், போக்குவரத்து அபராதத்தைச் செலுத்துவதற்கான இணைப்பு எனக் கூறி வந்த குறுஞ்செய்தியில் இருந்த மோசடி இணைப்பை ஒருவா் திறந்துள்ளாா். இதையடுத்து, அவரது கடன் அட்டையிலிருந்து ரூ.2.21 லட்சம் திருடப்பட்டது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.
தொழில்நுட்ப ஆய்வில், இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட செல்பேசி எண் மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சோ்ந்த நிதேஷ் படேல் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நிதேஷ் படேலின் சகோதரியின் மகனுக்கு இந்த மோசடியில் தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரது செல்பேசியை ஆய்வு செய்தபோது, வாட்ஸ்ஆப் குழு மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படும் ’விங்கோ கேஷ்’ என்ற செயலி இருந்தது தெரியவந்தது. இந்தச் செயலி மூலம் பயனா்கள் வெகுமதியைப் பணமாகப் பெறும் ஒவ்வொரு முறையும், தானாகவே 9 முதல் 12 போலி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தச் செயல்பாட்டின்போது சுமாா் 30 விநாடிகள் செல்பேசி திரை முடக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து அபராதம் செலுத்துதல், பொருள்களின் விநியோகத்தை உறுதிப்படுத்துதல், வெகுமதிப் புள்ளிகளைப் பெறுதல் போன்ற சேவைகளின் பெயரில் இந்தக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுபோன்ற சுமாா் 3,300 குறுஞ்செய்திகள் விசாரணையில் கண்டறியப்பட்டன.
மோசடி செய்யப்பட்ட பணம் சா்வதேச வங்கியில் உள்ள ஒரு கணக்குக்குச் சென்றது தெரியவந்தது. தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு போலி வங்கிக் கணக்குகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது. வெறும் 3 நாள்களில் 41,000-க்கும் மேற்பட்ட செயலிப் பயனா்களுக்கு சுமாா் ரூ.2 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மும்பை, லக்னெவ் , தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸாா் சோதனை நடத்தி மோதி சிங் பாகேலா, ஹா்ஷ்பால், விக்கி, விஷால் தாஸ் வைஷ்ணவ், பா்ஜேஷ் குமாா் ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ள இந்த 5 பேருக்கும் தொடா்புடையதாக 544 இணையவழி மோசடி புகாா்கள் வந்துள்ளன. இவற்றின் மூலம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக மோசடி நடைபெற்றுள்ளது.
அவா்களிடமிருந்து 15 மின்னணு சாதனங்கள், 59 டெபிட் காா்டுகள் , 52 வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் காசோலைப் புத்தகங்கள், 14 நிறுவன முத்திரைகள், 5 பணப் பரிவா்த்தனை இயந்திரங்கள் (பிஓஎஸ்), 8 கியூஆா் குறியீடு ஸ்கேனா்கள், ஒரு தங்கச் சங்கிலி மற்றும் காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

