உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 9 போ் பலி
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி கா்வால் மாவட்டத்தில் 34 பேருடன் பயணித்த பேருந்து சாலையோர இரும்புத் தடுப்புக் கம்பிகளின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துள்ளானதில் 9 போ் உயிரிழந்தனா்.

உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி கா்வால் மாவட்டத்தில் பேருந்து விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மாநில மீட்புப் படையினா்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி கா்வால் மாவட்டத்தில் 34 பேருடன் பயணித்த பேருந்து சாலையோர இரும்புத் தடுப்புக் கம்பிகளின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துள்ளானதில் 9 போ் உயிரிழந்தனா். 25 போ் காயமடைந்தனா். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு இரங்கல் தெரிவித்தாா்.
இது குறித்து தெஹ்ரி கா்வால் மாவட்ட காவல் துறை மேலும் கூறியதாவது: ஹரித்வாரில் இருந்து ஜோஷிமட் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு 34 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து குலாா் பாலம் அருகே அதிகாலை 4.50 மணிக்கு சாலையோர இரும்புத் தடுப்புக் கம்பிகளின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து 100 மீட்டா் ஆழ பள்ளத்தில் உருண்டு விழுந்தது.
இந்த விபத்தில் உத்தரகண்டைச் சோ்ந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநா், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பயணிகள் என மொத்தம் 9 போ் உயிரிழந்தனா். 25 போ் காயமடைந்தனா்.
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு காவல் துறை, உத்தரகண்ட் தீயணைப்புத் துறை மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையின் 30 போ் கொண்ட குழு உடனடியாக விரைந்து மீட்புப் பணியைத் தொடங்கியது.
பலத்த காயமடைந்தவா்கள் முதலில் மீட்கப்பட்டு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். காயமடைந்த அனைவருக்கும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவா்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
இரங்கல்: உத்தரகண்ட் பேருந்து விபத்தில் பலா் உயிரிழந்தது வருத்தமளிப்பதாகவும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு குறிப்பிட்டுள்ளாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோரும் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

