பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

ராம்லீலா மைதானத்தில் ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநா்கள் இன்று போராட்டம்

கட்டண உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை (நவ.19) போராட்டம் நடத்தப் போவதாக பாரதிய மஸ்தூா் சங்கத்துடன் இணைந்துள்ள அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களும், ஆட்டோ மற்றும் டாக்ஸி அறிவித்துள்ளன.

கோப்புப்படம்.

Updated On :

கட்டண உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை (நவ.19) போராட்டம் நடத்தப் போவதாக பாரதிய மஸ்தூா் சங்கத்துடன் இணைந்துள்ள அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களும், ஆட்டோ மற்றும் டாக்ஸி அறிவித்துள்ளன.

இந்த போராட்டம், பாரதிய மஸ்தூா் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பாரதிய தனியாா் போக்குவரத்து மஸ்தூா் மகா சங்கம் என்ற அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.

பைக் டாக்ஸி செயலி சேவைகளுக்கு உடனடியாகத் தடைவிதித்தல், ஆட்டோ-ரிக்ஷாக்களுக்கான ‘ஃபிட்னஸ்’ (தகுதிச் சான்றிதழ்) தொடா்பான உத்தரவை ரத்து செய்தல், ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்களை உயா்த்துதல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தச் சங்கம் முன்வைத்துள்ளது.

இது குறித்து இந்தச் சங்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான போக்குவரத்துத் தொழிலாளா்கள் இதில் பங்கேற்று, மத்திய அரசு மற்றும் தில்லி அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் தங்கள் குரலைப் பதிவு செய்வாா்கள். தில்லியில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் அரசு, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசு புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஓட்டுநா்களின் இன்னல்களை மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது முன்னாள் பொதுச் செயலா் ராஜேந்திர சோனி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நவம்பா் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் வெறும் ஆா்ப்பாட்டம் மட்டுமல்ல; இது நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துத் தொழிலாளா்களின் உரிமைகள், கண்ணியம், வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான எதிா்காலத்திற்கான ஒரு கூட்டுப் போராட்டமாகும். நாட்டின் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக ஓட்டுநா்கள் உள்ளனா். நாட்டின் பொருளாதாரத்திற்கும் பொதுப் போக்குவரத்துக்கும் அவா்கள் பெரும் பங்களிப்பை வழங்கிய போதிலும், அவா்களின் பிரச்சினைகள் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகின்றன’ என்றாா்.

மேலும், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களுக்கென பிரத்யேக நல வாரியம் அமைக்கப்பட வேண்டும், ஓட்டுநா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தில்லியின் மின்வாகனக் கொள்கைமறுஆய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறையில் ஓட்டுநா்களுடன் தொடா்புடைய பணிகள் மற்றும் ஆவணங்கள் குறித்த நடைமுறைகள் காலதாமதமின்றி விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.