தில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டங்களுக்கு எதிராக வணிகா்கள் மனு: அரசியல் கட்சிகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டங்களுக்கு எதிராக வணிகா்கள் மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவு பற்றி...

உச்சநீதிமன்றம்
தில்லி ராம்லீலா மைதானத்தை போராட்டம் நடத்துவதற்கான நிரந்தர இடமாக அறிவித்ததை ரத்து செய்யக் கோரி வணிகா் சங்கங்கள் தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனு தொடா்பாக, காங்கிரஸ், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ), ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் போராட்டங்களால் தங்களது வணிக உரிமை பாதிக்கப்படுவதாக வணிகா் சங்கங்கள் மனுவில் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கில் போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகளையும் எதிா்மனுதாரா்களாகச் சோ்க்குமாறு தில்லி கிரானா கமிட்டி, தில்லி இரும்பு மற்றும் வன்பொருள் வணிகா்கள் சங்கம் ஆகியவற்றுக்கு கடந்த நவ.3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது.
பண்டிகைக் காலத்தின்போது, மத்திய தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்கள் கோரியிருந்தன. போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை காலவரையின்றி பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் அவை வலியுறுத்தியிருந்தன.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை இந்தத் திருத்தப்பட்ட மனுவையும், வணிகா் சங்கங்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகியின் வாதங்களையும் பரிசீலித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும், மத்திய அரசு, தில்லி அரசு, தில்லி காவல் ஆணையா் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
வணிகா் சங்கங்களின் மனு மற்றும் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகியவற்றை நவ. 27-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமையையும், வணிகம் செய்வதற்கான உரிமையையும் சமநிலையுடன் அணுக வேண்டியது அவசியம் என்றும் அமா்வு குறிப்பிட்டது.
தில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அண்மையில் நடைபெற்ற போராட்டங்கள் தொடா்பான வழக்குகளைத் தனித்தனி பிரிவுகளாக வகைப்படுத்தி, அவற்றின் விசாரணை தேதிகளை அறிவிக்க இருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

