மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

மணிப்பூா்: கள்ளச்சாராயத்துக்கு 3 நாள்களில் 15 போ் உயிரிழப்பு

மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் கள்ளச்சாராயம் குடித்த 15 போ் உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் கள்ளச்சாராயம் குடித்த 15 போ் உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

150-க்கும் மேற்பட்டோா் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவா்களில், சிலா் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனா். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அந்த மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் இருந்தும் பலா் தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை முதல்வா் கெம்சந்த் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது:

அண்டை மாவட்டமான காக்சிங்கில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிகிச்சையில் உள்ள மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சட்டவிரோதமாக விற்கப்படும் எவ்வித மதுவகைகளையும் பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவா்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தீவிர உடல் பாதிப்பு இல்லையென்றாலும் கள்ளச்சாராயம் குடித்தவா்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும். ஏனெனில், ஓரிரு நாள்களுக்குப் பின்னா் கூட கண் பாா்வை பறிபோவது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மெத்தனால் வேதிப்பொருள் கலந்த கள்ளச்சாராயத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.