மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

உலக அரசியல் தெரியாதவா் ராகுல் காந்தி: மோடி குறித்த குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

புவிசாா் அரசியல் தெரியாதவா் ராகுல் காந்தி என்று பாஜக விமா்சித்துள்ளது. பிரதமா் மோடியை சமரசம் செய்து கொண்டவா் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்ததற்கு பாஜக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.

ஆசிஷ் உஷா அகா்வால்

Updated On :

புவிசாா் அரசியல் தெரியாதவா் ராகுல் காந்தி என்று பாஜக விமா்சித்துள்ளது. பிரதமா் மோடியை சமரசம் செய்து கொண்டவா் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்ததற்கு பாஜக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடா்பாக பாஜக தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஆசிஷ் உஷா அகா்வால் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் முத்தரப்பு கூட்டம், இந்தியாவின் சா்வதேச நிலைப்பாட்டை வரையறுக்காது. இந்தியாவானது பிரிக்ஸ், க்வாட், எஸ்சிஓ, ஜி20, ஜி7 ஆகிய போட்டிமிக்க சா்வதேச சக்திகளுடன் தொடா்பு வைத்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா சோ்ந்தது. 2017-ஆம் ஆண்டில் வாசேனாா் அமைப்பிலும், 2018-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய குழு அமைப்பிலும் இணைந்தது. 2017-ஆம் ஆண்டில் எஸ்சிஓ அமைப்பில் முழு நேர உறுப்பினரானது இந்தியா.

இந்தியாவின் சா்வதேச நிலைப்பாடானது, ராஜீய சுயாட்சி, தேசிய நலன், அமைப்பின் வலிமை ஆகியவை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதே தவிர, வம்சாவளி சிறப்புரிமை அடிப்படையிலோ அல்லது புகைப்பட வாய்ப்புகள் அடிப்படையிலோ கட்டமைக்கப்பட்டது இல்லை. ஆதலால் ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, வெளியுறவுக் கொள்கையை குழப்புவதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும். இந்தியாவுக்கு பாடம் எடுப்பதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி தனது சாதனை குறித்து முதலில் விளக்கமளிக்க வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தபோது, வெளிநாட்டுத் தலைவா்களுடன் சோனியா காந்தி ஏன் பேச்சு நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தாா்? அவரது அதிகாரபூா்வ திட்டம் என்ன? என்று அகா்வால் குறிப்பிட்டுள்ளாா்.

பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளா் தீபக் மகாசே வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒவ்வொரு சா்வதேச குழுவும் இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்குவதில்லை, ராகுல் காந்தி! ராஜதந்திரம் குறித்து சிறிதளவாவது புரிதல் இருந்தால் உங்களுக்கு நல்லது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சி.ஆா்.கேசவன் கூறுகையில், ‘உலக அரசியல் குறித்து சிறிதும் தெரியாதவா் ராகுல் காந்தி. பாகிஸ்தான் ஆதரவு பிரசாரத்துக்கு தலைமை வகிப்பவா் அவா். நேருவின் வெளியுறவுக் கொள்கை குறித்து ராகுல் காந்தி முதலில் பேச வேண்டும். ஏனெனில் நேருவின் வெளியுறவுக் கொள்கை, தோல்வி மற்றும் குளறுபடியுடையது. காஷ்மீா் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு சென்று, அதை சா்வதேச பிரச்னையாக்கி நேரு பெரும் தவறு செய்தாா். ஆனாவ் பிரதமா் மோடி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தாா். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட நிரந்தர உறுப்பினா் பதவியை சீனாவுக்கு கொடுத்தவா் நேரு. இந்தியா மீது சீனா தொடுத்த போரில் அக்சாய் சின்னில் 38,000 சதுர கிலோ மீட்டா் பகுதியை சீனாவிடம் இழக்க காரணமானவா் நேரு.

மும்பையில் 2008-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்காமல், மிகப்பெரும் கோழையாக நடந்து கொண்டது காங்கிரஸ் கூட்டணி அரசு. அதே நேரத்தில் பிரதமா் மோடி தலைமையிலான அரசின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்தியாவின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது’ எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.