உ.பி.யில் டிரக் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 5 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் டிரக் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியது பற்றி...

உ.பி.யில் விபத்தில் சிக்கிய வாகனங்கள். - Photo grab X video.
உத்தர பிரதேசத்தில் டிரக் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் 5 பேர் பலியாகினர்.
உத்தர பிரதேச மாநிலம், பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில், டிரக் மீது ஆம்புலன்ஸ் வாகனம் சனிக்கிழமை காலை மோதியதில் 5 பேர் பலியானதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்து காலை 6.30 மணியளவில், சுபேஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெரவான் கிராமத்திற்கு அருகில் நிகழ்ந்தது.
காவல் கண்காணிப்பாளர் ரவீனா தியாகி கூறுகையில், ஜெய்ப்பூரிலிருந்து காசிபூருக்குச் சடலம் ஏற்றிச் சென்ற, ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட ஆம்புலன்ஸ், பிக்கப் டிரக் மீது பின்புறமாக மோதியதாகத் தெரிவித்தார்.
விபத்து ஏற்படுவதற்கு முன்பு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சமூகச் சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் கூறினர்.
Summary
Five people were killed after an ambulance rammed into a stationary pickup vehicle on the Purvanchal Expressway here on Saturday morning, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


